மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு அதிமுக எம்பி விஜிலா சத்தியானந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்விநேரத்தின் போது பேசிய அவர், ஏழைகளின் முன்னேற்றத்துக்காக தனது கடைசி மூச்சுவரை பாடுபட்டவர் ஜெயலலிதா. அவரது மதி நுட்பம் மற்றும் ஆட்சித்திறனை உலகின் எந்த தலைவருடனும் ஒப்பிட முடியாது. அவரது 32 ஆண்டுகால மக்கள் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். மேலும், அவரது முழு உருவ வெண்கலச்சிலையை நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவவும், பெண்கள், குழந்தைகள் முன்னேற்றத்துக்காக உழைத்த அவருக்கு நோபல் பரிசு வழங்க மத்திய அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என்று விஜிலா சத்தியானந்த் பேசினார்.