ஒரே பெயரில் இரு மனைவிகள்: அம்பலமான அதிமுக பிரமுகரின் ஆள்மாறாட்டம்

ஒரே பெயரில் இரு மனைவிகள்: அம்பலமான அதிமுக பிரமுகரின் ஆள்மாறாட்டம்
ஒரே பெயரில் இரு மனைவிகள்: அம்பலமான அதிமுக பிரமுகரின் ஆள்மாறாட்டம்
Published on

ஒரு மனைவியின் பெயரில் உள்ள சொத்தை, அதே பெயரைக்கொண்ட மற்றொரு மனைவியின் மூலம் பத்திரப்பதிவு செய்த அதிமுக பிரமுகரின் செயல் அம்பலமாகியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள போடுவார்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் அதிமுகவில் மணப்பாறை எம்ஜிஆர் மன்ற ஒன்றிய அவைத் தலைவராகவுள்ளார். இவருக்கு கடந்த 1996ஆம் ஆண்டு நிர்மலாதேவி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அரசுப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றும் நிர்மலாதேவி ஒரு மாற்றுத்திறனாளி. இவர்களுக்கு அனுஷ்கா என்ற மகள் உள்ளார்.

(மேலே இருக்கும் புகைப்படம் முதல் மனைவி நிர்மலாதேவி)

மாற்றுத்திறனாளி முதல் மனைவி இருக்கும்போதே குரும்பட்டியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை சந்திரசேகர் திருமணம் செய்துகொண்டார். அவரது பெயரும் நிர்மலாதேவிதான். இப்பெண் அதிமுக ஒன்றிய கவுன்சிலராக இருந்தவர். மாற்றுத்திறனாளி முதல் மனைவி மணப்பாறை கோவில்பட்டி சாலை வீட்டிலும், 2வது மனைவி போடுவார்பட்டியிலும் வசித்து வருகின்றனர். முன்னதாக மணப்பாறை கோவிந்தசாமி தெருவில் உள்ள 2011 சதுரடி காலி வீட்டுமனையினை, முதல் மனைவி நிர்மலாதேவிக்கு சில வருடங்களுக்கு முன்பு சந்திரசேகர் தானமாக எழுதி கொடுத்தார்.

இதற்கிடையே ராஜீவ் நகரில் புதிதாக வீட்டுமனை வாங்கிய முதல் மனைவி நிர்மலாதேவி, தற்போது அங்கு வீடுகட்டி வசித்து வருகிறார். இதனிடையே கணவருக்கும் முதல் மனைவிக்கும் குடும்ப பிரச்சனை ஏற்பட்டதால் முதல் மனைவி நிர்மலாதேவியிடம், தான் தானமாக கொடுத்த காலி வீட்டுமனையை தனது பெயருக்கு எழுதி தருமாறு சந்திரசேகர் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவர்  மறுத்து விட்டார்.  இதையடுத்து கடந்த நவம்பர் 30ஆம் தேதி 2வது மனைவி நிர்மலாதேவியை மணப்பாறை சார்பதிவாளர் அலுவலகம் அழைத்துச் சென்ற சந்திரசேகர், அவர்தான் தன் முதல் மனைவி நிர்மலாதேவி என்று கூறி போலி கையெழுத்து போட்டு ஆள்மாறாட்டாம் செய்து, இடத்தை தன் பெயருக்கு பத்திரப்பதிவு செய்துள்ளார்.

இதையறிந்த முதல் மனைவி நிர்மலாதேவி, கணவர் சந்திரசேகர் மற்றும் 2வது மனைவி நிர்மலாதேவி அடுத்து சாட்சி கையொப்பம் இட்ட இருவர் மீதும் ஆன்லைன் மூலம் காவல்துறையில் புகார் பதிவு செய்துள்ளார். மேலும் சென்னை பதிவுத்துறை ஐ.ஜி, மாவட்ட பதிவாளர் மற்றும் மணப்பாறை சார்பதிவாளரிடமும் புகார் அளித்துள்ளார். இதனால் மணப்பாறை சார்பதிவாளர், சந்திரசேகரையும் மற்றும் அவரது 2வது மனைவியையும் அலுவலகம் அழைத்து, புதிய பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டதாக கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com