வேலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து அமைச்சர்கள் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்களவைத் தேர்தலின் போது வேலூரை தவிர இந்தியா முழுவதும் தேர்தல் நடந்து முடிந்தது. வேலூரில் மட்டும் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்யப்பட்டதாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. குறிப்பாக ரூ.10 கோடிக்கும் மேலாக பணம் எடுக்கப்பட்டது. இந்நிலையில் வேலூர் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் கதிர் ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், வேலூர் தொகுதி கொசப்பேட்டை பகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தனது பரப்புரையை தொடங்கியுள்ளார். அவரை ஆதரித்து அதிமுக அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் பரப்பரையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல், சத்துவாச்சேரி பகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்த் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். காலை 8.30 மணியளவில் இருந்து பரப்புரையை தொடங்கியுள்ளார்.