சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் மற்றும் கொறடா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வம் எதிர்க்கட்சி துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கொறடாவாக எஸ்.பி. வேலுமணி தேர்ந்தடுக்கப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அதிமுக தொண்டர்களுடன் சசிகலா தொடர்ந்து தொலைபேசியில் பேசிவந்த ஆடியோக்கள் குறித்து பேசப்பட்டது. அதன்பிறகு இந்தக் கூட்டத்தில், சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய அனைவரையும் நீக்க வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சசிகலாவுடன் உரையாடுவோர் யாராக இருந்தாலும் கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சசிகலா அதிமுகவை அபகரிக்கப் போவதாக ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசி வருகிறார்; மேலும் அவர் தொலைபேசியில் பேசுவதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பி விநோத நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். எனவே ஒரு குடும்பத்தின் அபிலாஷைகளுக்காக அதிமுக ஒருபோதும் தன்னை அழித்துக் கொள்ளாது என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்.

ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம். pic.twitter.com/D0epqAjBNS
— AIADMK (@AIADMKOfficial) June 14, 2021