“அண்ணாமலை ஒரு விட்டில் பூச்சி...” - கடுமையாக விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தரக்குறைவாக பேசியதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதனிடம் அதிமுக நிர்வாகி டாக்டர் சரவணன் புகார் அளித்துள்ளார்.
பாஜக அண்ணாமலை
பாஜக அண்ணாமலைமுகநூல்
Published on

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தரக்குறைவாக பேசியதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதனிடம் அதிமுக நிர்வாகி டாக்டர் சரவணன் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், "கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்சி பொதுக்கூட்டத்தில் பேசுகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாகவும், பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாகவும் கடுமையான விமர்சனங்களை கூறி தரக்குறைவாக பேசியுள்ளார். தொடர்ந்து அவர் இதுபோன்று தெரிவிக்கும் கருத்துக்களால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, அதிமுக குறித்து எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இது தொடர்பாக பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலையை கடுமையாக சாடியுள்ளார்.

“விபரீத புத்திகள் வரும் பொழுது... தரம்தாழ்ந்த பேச்சு!”

பாஜக அண்ணாமலை
அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிய பேருந்துகள்!

அவர் பேசுகையில், "வினாச காலே விபரீத புத்தி என்று சொல்வார்கள். விபரீத புத்திகள் வரும் பொழுது இந்த மாதிரி ஒரு தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வரும். அழிவை நோக்கி அண்ணாமலை சொல்கிறார் என்பதற்கான எடுத்துக்காட்டுதான் அவரது (அண்ணாமலை) பேச்சு. மிகவும் தரம் தாழ்ந்த பேச்சு.

ஒரு மாநில தலைவராக இருக்க எந்த தகுதியும் இல்லாத ஒரு நபர் அண்ணாமலை. அவரை பிஜேபி பெற்றிருக்கிறது என்பது மிக மிக வருத்தப்படக்கூடிய வேதனைக்குரிய விஷயம். அரசியலில் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

அண்ணாமலை எங்கள் பொதுச் செயலாளரை மட்டும் விமர்சனம் செய்யவில்லை. அதிமுகவையும் விமர்சனம் செய்துள்ளார். இவையாவும் வன்மையாக கண்டிக்கத்தக்கவை.

அண்ணாமலை பிஜேபி கார்ப்பரேட்டின் மேனேஜர்

அண்ணாமலையப் பொருத்தவரை அவர் மாநிலத் தலைவர் அல்ல. பிஜேபி என்கிற ஒரு கார்ப்பரேட்டின் மேனேஜர். இந்த மேனேஜர் யாருடைய ஆட்டத்துக்கு ஆடுகிறார் என்றால் மு.க.ஸ்டாலின் ஆட்டத்திற்கு ஆடுகிறார். மு.க.ஸ்டாலின், தேர்தல் காலத்தில் பிஜேபிக்கும் எங்களுக்கும் ரகசிய கூட்டணி இருக்கிறது என சொல்லி வந்தார்.

பாஜக அண்ணாமலை
முத்தமிழ் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள்: அரசியல் கட்சிகள் எதிர்ப்பு!

இன்றோ பிஜேபியும் திமுகவும் ரகசிய கூட்டணி வைத்துள்ளன. இரண்டு கார்ப்பரேட் கம்பெனிகளும் ஒன்றாகி, ரகசிய கூட்டணி அமைத்து அது பெரிய அளவிற்கு விவாத பொருளாக மாறியிருக்கிறது. இன்று ஸ்டாலின் பேச்சை கேட்டு விட்டு, ‘ரகசிய கூட்டணி இல்லை’ என்று சொல்வதற்காக அந்த மேடையை மிக அநாகரிகமாக பயன்படுத்தியிருக்கிறார்.

அண்ணாமலை ஒரு விட்டில் பூச்சி!

அண்ணாமலை நிலைமை ஒரு விட்டில் பூச்சியின் நிலைதான். விட்டில் பூச்சியின் வாழ்க்கை வெறும் 7 நாட்கள்தான். அண்ணாமலையின் அரசியல் நிலைமை இன்று அப்படித்தான் இருக்கிறது. ஆனால் இதை மறந்துவிட்டு ஒரு பாரம்பரிய மிக்க ஒரு கட்சியை 52 ஆண்டு பழைமையான கட்சியை.... விமர்சிக்கிறார். அதற்கு அண்ணாமலைக்கு தகுதி இருக்கிறதா?

அதிமுகவை... இந்த ஆலமரத்தை ஒழிப்பதுதான் என் வேலை என்று இந்த விட்டில் பூச்சி சொல்கிறார். அதிமுக-வை ஒழிக்க கருணாநிதியால்கூட முடியவில்லை... ஏன், அவரது முப்பாட்டனால் கூட அது முடியவில்லை. இதுதான் வரலாறு, இனி எத்தனை ஏழேழு ஜென்மங்கள் அண்ணாமலை எடுத்தாலும் அதிமுக-வை அழிப்பதற்கு ஒருத்தர் கூட பிறக்க முடியாது.

பாஜக அண்ணாமலை
தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு - சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார் EPS!

இனி ஒருத்தர் கூட பிறக்க முடியாது...

அண்ணாமலை அரசியலில் நேற்று பிறந்த குழந்தை. 3 வருடங்கள்தான் ஆகிறது. அண்ணாமலைக்கு விரக்தி. ஒரு பக்கம் அண்ணாமலை லண்டன் செல்கிறார் - இன்னொரு பக்கம் முதல்வர் அமெரிக்கா செல்கிறார். இரண்டு பேரும் அங்கு சென்று என்ன பேசப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

பியூஸ் போன பல்பு

பாஜக-வை பொறுத்தவரை, அவர்கள் அண்ணாமலை என்னும் மேனேஜரை விடுவித்து விட்டார்கள். அண்ணாமலை ஒரு மேலாளர். அதுதான் அவரது நிலை, இபிஎஸ் ஒரு கட்சியின் பொதுச் செயலாளர். இரண்டு கோடி தொண்டர்களை கொண்டிருக்க கூடிய ஒரு மாபெரும் இயக்கத்தினுடைய தலைவர். அப்படி இருக்கும் ஒருவர் இழிவுபடுத்துகிறார் என்று சொன்னால், இந்த விட்டில் பூச்சி அண்ணாமலையை பியூஸ் போன பல்பாகத்தான் நாட்டு மக்கள் பார்க்கிறார்கள்.

ஆட்சி என்பது தமிழ்நாட்டில் உங்களுக்கு (பாஜக) பகல் கனவாகதான் இருக்கும், அது உங்களுக்கு கானல்நீர்தான். கோட்டை பக்கமே உங்களால் வரமுடியாது.

உங்களால் ஒரு எம்எல்ஏ சீட் கூட வெற்றி பெற முடியாது. உங்கள் அப்பா உங்கள் அப்பாவுக்கு அப்பா என யார் வந்தாலும் சரி... வேறு வழியில்லாமல் சொல்கிறேன், எந்த கொம்பன் வந்தாலும் சரி... அதிமுகவை அழிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com