தேனியில் அதிமுக பேனர் சாய்ந்து விபத்து ஏற்பட்டதில் இருவர் காயமடைந்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள லட்சுமிபுரம் பகுதியில் வரும் 11ஆம் தேதி அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசாறை சார்பாக, ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்திற்காக அப்பகுதி பல இடங்களில் பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
சாலையில் விதிமுறைகளை மீறி அவை வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில் பெரியகுளம் தென்கரை பகுதியில் உள்ள ராட்சத பேனர் சாய்ந்து விழுந்துள்ளது. இதில் சாலையில் சென்ற இருவர் காயமடைந்தனர்.
அவர்கள் இருவரையும் மீட்ட பொதுமக்கள், பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்தச் சம்பவத்தையடுத்து போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக உள்ள பேனர்களை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
(தகவல்கள்: அருளானந்தம், புதிய தலைமுறை செய்தியாளர், தேனி)