2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான கூட்டணி பேச்சு வார்த்தைகள், தொகுதி பங்கீடு ஆகியவை கிட்டதட்ட முடிவு நிலையை எட்டிவிட்டன. இதன்படி அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தேமுதிகவிற்கு விருதுநகர், தருமபுரி, திருச்சி, கள்ளக்குறிச்சி, மத்திய சென்னை ஆகிய தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இப்படி நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணிகள் தீவிரம் அடைந்து வரும் நிலையில் நேற்று அதிமுக தங்களின் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.
இந்நிலையில், தற்போது இரண்டாம் கட்ட வேட்பாளர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது அதிமுக.
இதன்படி,
ஶ்ரீ பெரும்புதூர் - பிரேம்குமார்
வேலூர் - எஸ்.பசுபதி
தருமபுரி - அசோகன்
திருவண்ணாமலை - கலியபெருமாள்
கள்ளக்குறிச்சி - குமரகுரு
திருப்பூர் - பி.அருணாச்சலம்
நீலகிரி - லோகேஷ் தமிழ்செல்வன்
கோவை - சிங்கை ராமச்சந்திரன்
பொள்ளாச்சி - கார்த்திக் அப்புசாமி
திருச்சி - கருப்பையா
பெரம்பலூர் - சந்திரமோகன்
மயிலாடுதுறை - பி.பாபு
சிவகங்கை - சேவியர்தாஸ்
தூத்துக்குடி - ஆர்.சிவசாமி வேலுமணி
திருநெல்வேலி - சிம்லா முத்துச்சோழன்
கன்னியாகுமரி - பசுலியான் நசரேத்
புதுச்சேரி - தமிழ்வேந்தன்
தமிழகத்தில் 39 பாரளுமன்ற தொகுதிகள் மட்டும் அல்லாது தற்போது காலியான விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வாணி என்பவர் போட்டியிடுவார் எனவும் அதிமுக அறிவித்துள்ளது.
இத்தொகுதியில், இதுவரை காங்கிரஸ் 7 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 5 முறையும் வெற்றி அடைந்திருக்கிறார்கள். கடைசியாக நடந்த 3 தேர்தல்களிலும் காங்கிரஸ் விஜயதாரணிதான் வெற்றி பெற்றார்.
ஆனால், இவர் சமீபத்தில் பாஜகவில் இணைந்ததால் விளவங்கோடு தொகுதி காலி என்று அறிவிக்கப்பட்டது. ஆகவே, தற்போது இத்தொகுதியும் சட்டப் பேரவை தேர்தலை சந்திக்க உள்ளது. இந்நிலையில் 33 மக்களவை தொகுதிகளிலும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதியிலும் அதிமுக போட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.