ஒரே தொகுதிகளை கேட்கும் பாமக, பாஜக - தொகுதிகளை இறுதி செய்யும் முனைப்பில் அதிமுக

ஒரே தொகுதிகளை கேட்கும் பாமக, பாஜக - தொகுதிகளை இறுதி செய்யும் முனைப்பில் அதிமுக
ஒரே தொகுதிகளை கேட்கும் பாமக, பாஜக - தொகுதிகளை இறுதி செய்யும் முனைப்பில் அதிமுக
Published on

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தொகுதிகளை இறுதிசெய்ய அதிமுகவுடன் பாமக தற்போது பேச்சுவார்த்தை நடத்துகிறது.

முன்னதாக அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது எந்தெந்த தொகுதிகள் என்பதை குறித்த பேச்சுவார்த்தையை நடத்திவருகிறது. ஹோட்டல் லீலா பேலசில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் அதிமுக ஈடுபட்டுள்ள நிலையில் பாமகவைச் சேர்ந்த ஜி.கே மணி, ஏ.கே மூர்த்தி ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

பாமக கேட்கும் தொகுதிகளில் சிலவற்றை பாஜகவும் வலியுறுத்துவதால் அதிமுக கட்சியானது பாஜக மற்றும் பாமகவினருடன் ஆலோசனை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து மாலை 5 மணியளவில் தேமுதிகவினருடனும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com