நீதிபதியின் உத்தரவை அடுத்து பறிமுதல் பொருட்களை குழந்தைகளுக்கு வழங்கிய கூடுதல் டிஜிபி

நீதிபதியின் உத்தரவை அடுத்து பறிமுதல் பொருட்களை குழந்தைகளுக்கு வழங்கிய கூடுதல் டிஜிபி
நீதிபதியின் உத்தரவை அடுத்து பறிமுதல் பொருட்களை குழந்தைகளுக்கு வழங்கிய கூடுதல் டிஜிபி
Published on

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதி. நேரடியாக குழந்தைகளை அழைத்து கூடுதல் டிஜிபி.பொருட்களை வழங்கினார்.

தமிழக காவல்துறை குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் குற்ற சம்பவங்களை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் அடிப்படையில் தமிழகத்தில் பல்வேறு போலியாக விதிமீறல், உள்நாடு மற்றும் தொழில்துறை தயாரிப்புகள் கைப்பற்றப்பட்டு வருகிறது.

2018 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் பிரபல நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்திய 600 பள்ளி பைகளை போலியாக தயாரித்து விற்பனை செய்த நிறுவனத்திலிருந்து 600 பைகளை பறிமுதல் செய்து வைக்கப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று வழக்கின் இறுதித் தீர்ப்பை சைதாப்பேட்டை 11-வது அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆதரவற்ற இல்லத்தில் படித்து வரும் பள்ளி குழந்தைகளுக்கு விநியோகித்து சேகரிக்கப்பட்ட சொத்துக்களை அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

இதனடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமையில் குழு அமைத்து சென்னையில் உள்ள சேவா சக்ரா குழந்தைகள் இல்லம், உண்மையான அறக்கட்டளை, குழந்தைகள் பராமரிப்பு இல்லம், ஸ்ரீ அருணோதயம் அறக்கட்டளை (மனவளர்ச்சி குன்றிய ஆதரவற்றோர் இல்லம்), அனைத்து குழந்தைகள் மற்றும் சமர்பனா, ஸ்பாஸ்டிக்ஸ் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இல்லத்தில் வசிக்கும் அனைத்து மாணவர்களையும் நேரில் அழைத்து சேகரித்து வைக்கப்பட்டிருந்த வழக்கிற்குச் சொந்தமான சொத்துக்கள் அனைத்தையும் நேரடியாக கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் வழங்கினார்.

இதில், நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் குழந்தைகளுடன் கூடுதல் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால சிறிது நேரம் கலந்துரையாடினார். வழக்கமாக ஒரு குற்றச் சம்பவத்தில் கைப்பற்றப்படும் பொருட்களை (குறிப்பாக மது, போதை பொருட்கள்) உள்ளிட்டவைகளை காவல்துறையினர் அழித்து வந்த நிலையில் முதன்முறையாக கைப்பற்றப்பட்ட வழக்கின் சொத்துக்களை குழந்தைகளுக்கு கொடுக்க நீதிபதி உத்தரவிட்டு உள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆதரவற்ற இல்லத்தில் இருந்து வந்த குழந்தைகளும் புத்தக பைகளை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com