“அழகர் திருவிழாவைவிட கோலாகலமாக உள்ளது” - அதிமுக மாநாடு குறித்து விந்தியா

"எங்கள் எழுச்சியை, பலத்தை, சாதனைகளை மற்றவர்களுக்கு காட்ட வேண்டும், மக்களுக்கு சொல்ல வேண்டும். நாங்கள் இருக்கிறோம், பயப்பட வேண்டாம் மீண்டும் ஆட்சிக்கு வருவோம், நல்லாட்சி தருவோம் என சொல்வதற்குத்தான் வேண்டும் மாநாடு" நடிகை விந்தியா

மதுரையில் அதிமுகவின் வயதை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்ட 51 அடி உயர கம்பத்தில் எடப்பாடி பழனிசாமி கொடியேற்ற, அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாடு தொடங்கியது. மேலும் அதிமுக ஆட்சிக்கால சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

முன்னதாக மாநாட்டிற்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு, ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டு விண்ணதிர வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் முக்கிய தீர்மானங்களை இம்மாநாட்டில் நிறைவேற்ற இபிஎஸ் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

இம்மாநாட்டில் கலந்து கொண்ட நடிகையும் அதிமுகவைச் சேர்ந்தவருமான விந்தியாவுடன் புதிய தலைமுறை நடத்திய நேர்காணலில் அவர் கூறியதாவது, “அதிமுக பலமான எதிர்க்கட்சியாக உள்ளது. எங்கள் தலைவர் மக்களுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் போராடிக்கொண்டுள்ளார்கள். எங்கள் கட்சி எழுச்சியாகத்தான் உள்ளது. ஆனால் எங்கள் எழுச்சியை, பலத்தை, சாதனைகளை மற்றவர்களுக்கு காட்ட வேண்டும், மக்களுக்கு சொல்ல வேண்டும். நாங்கள் இருக்கிறோம், பயப்பட வேண்டாம் மீண்டும் ஆட்சிக்கு வருவோம், நல்லாட்சி தருவோம் என சொல்வதற்குத்தான் வேண்டும் மாநாடு. மதுரையில் அழகர் திருவிழாவைவிட கோலாகலமாக மாநாடுநடந்து வருகிறது” என்றார். முழு காணொளியும் செய்தியில் இணைக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com