“இதுபோன்று வேறுயாருக்கும் நடக்கக் கூடாது என நினைக்கிறோம்; அரசியலாக்க விரும்பவில்லை” - நடிகை நமீதா

"என்னிடம் முஸ்லீமா? இந்துவா எனக் கேட்டு 15 நிமிடமாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் அதிகாரிகள் காத்திருக்க வைத்தார்கள். அதிகாரிகள், கண்ணியமுடன் பக்தர்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. இதனை அரசியலாக்க வேண்டாம்" - நமீதா.
நடிகை நமீதா
நடிகை நமீதாpt desk
Published on

செய்தியாளர்: மணிகண்டபிரபு

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்ய சென்ற போது தன்னிடம் இந்து மத சான்று கேட்டதாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான நமீதா வெளியிட்ட வீடியோ மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

நடிகை நமீதா
“மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இந்து அறநிலையத் துறையினர் என்னை அனுமதிக்கவில்லை” - நமீதா

இந்நிலையில் இது தொடர்பாக மதுரை பாண்டியன் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்து நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி பேசியபோது...

மதுரை மீனாட்சியம்மன் கோவில்
மதுரை மீனாட்சியம்மன் கோவில்pt desk

“நாங்கள் மீனாட்சியம்மன் கோயிலுக்கு இஸ்கான் கோவில் நிர்வாகிகளுடன் சென்ற போது, அங்கிருந்த கோயில் அதிகாரிகள் எங்களை தடுத்து நிறுத்தி ‘நீங்கள் இந்துவா முஸ்லீமா?’ என கேள்வி எழுப்பினர். நாங்கள் முஸ்லீம் என தகவல் கிடைத்துள்ளதாக கூறிய அவர்கள், நாங்கள் இந்து என்பதற்கான சான்றை காண்பிக்க வேண்டும் எனக் கூறினர். நாங்கள் ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை காட்டிய போது ‘இதில் மத அடையாளம் இல்லை’ எனக் கூறிய கோவில் அதிகாரிகள் அவமரியாதையாக பேசினர்.

நடிகை நமீதா
வலியை மீறி அம்மாவுக்காக உடைந்துபேசிய சிறுவன்.. கல்வி கட்டணம் முதல் வீட்டு சாமான்கள் வரை உதவிய விஜய்!

15 நிமிடத்திற்கு மேலாக காத்திருக்க வைத்தனர். இந்துக்கள் என நாங்கள் பலமுறை கூறியும் அவர்கள் கேட்க மறுத்தனர். தமிழகத்தில் உள்ள மீனாட்சியம்மன் கோவிலில் இதுபோன்று இந்து மதத்திற்கான சான்று கேட்டது மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வரக்கூடிய கோவிலில் இது போன்று அதிகாரிகள் நடந்து கொள்வதென்பது, தமிழகத்தின் பெயருக்கு தவறாக அமைந்துவிடும்.

நடிகை நமீதா
நடிகை நமீதாpt desk

நாங்கள் இந்து என பலமுறை எடுத்துக் கூறியும் அவர்கள் அனுமதிக்கவில்லை. பின்னர் அவர்கள் குங்குமத்தை கொடுத்து நெற்றியில் வைக்கச் சொன்னார்கள். அதனையடுத்து நாங்கள் உள்ளே தரிசனம் செய்யச் சென்றோம். இதுபோன்று தமிழகத்தில் உள்ள கோவிலில் மதச்சான்று கேட்டது மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதிலும் பல்வேறு கோவில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளோம். பிறப்பால் இந்துவாக இருந்து எங்களது குழந்தைகளுக்கு கிருஷ்ணருடைய பெயரை வைத்துள்ளோம். எங்களிடமே கோவில் அதிகாரிகள் அவமரியாதையாக நடந்து கொண்டனர். இருந்தபோதிலும் நாங்கள் இதனை அரசியலாக்க நினைக்கவில்லை. இதை அரசியலாக்க வேண்டாம்” என்றார்.

நடிகை நமீதா
மயிலாடுதுறை: ‘நட்பு அது மாற்றம் இன்றி தொடருமே...’ - ரீ-யூனியனில் நெகிழ்ந்த 1982 தோழிகள்!

தொடர்ந்து நடிகை நமீதா பேசியபோது... “நான் இதுவரை 5 முறை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்திருக்கிறேன். இப்படியான என் ஆன்மிக பயணத்தின்போது யாருக்கும் தொந்தரவு அளிக்கக் கூடாது என்பதற்காக யாருக்கும் தெரியாமலேயே நான் செல்வேன். அதேபோன்றுதான் இன்றும் சென்றேன். ஆனால் மீனாட்சியம்மன் கோவிலில் என்னிடம் முஸ்லிமா, இந்துவா என கேட்டனர். என் கணவர் அவர்களிடம் பேசினார்.

மதுரை மீனாட்சியம்மன் கோவில்
மதுரை மீனாட்சியம்மன் கோவில்pt desk

அதையடுத்துதான் அனுமதித்தனர். காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி. ஏனெனில் அவர்கள்தான் நன்றாக தரிசனம் செய்ய வைத்தார்கள், பாதுகாப்பாக திரும்பினோம், இது தொடர்பாக புகார் அளிக்க போவதில்லை. இருப்பினும் இதுபோன்று மறுபடி நடக்கக் கூடாது என நினைக்கிறோம். அனைத்து அதிகாரிகளுக்கும் ஒரு வேண்டுகோள்... கோவிலுக்கு வருபவர்களை கண்ணியத்துடன் வரவேற்க வேண்டும், நல்ல கலாசாரத்தில் உள்ளோம் நாம். அரசும், நல்ல தகுதியான அதிகாரிகளை நியமிக்க வேண்டும்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com