தெலுங்கு பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து.. தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி கைது!

தெலுங்கு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவதூறாக பேசியதாக கஸ்தூரி மீது வழக்குகள் பதியப்பட்ட நிலையில், தற்போது போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் நடிகை கஸ்தூரி.
கஸ்தூரி
கஸ்தூரிபுதிய தலைமுறை
Published on

தெலுங்கு பெண்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில், ஐதராபாத்தின் கச்சிபௌலி என்கிற இடத்தில் நடிகை கஸ்தூரி அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலைமறைவாக இருந்த கஸ்தூரியைப் பிடிக்க தனிப்படை அமைத்து தமிழ்நாடு காவல்துறை தேடிவந்த நிலையில், இன்று மாலை அதிரடியாக அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கஸ்தூரி
“ஒரு சமூகத்தை தமிழர்கள் இல்லை என கூற யாருக்கும் உரிமையில்லை..” ஆவேசமாக பேசிய கஸ்தூரி!

சர்ச்சைக்குரிய வகையில் கருத்து..

பிராமணர்களுக்கு தனிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்தி கடந்த 3-ம் தேதி சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டு பேசினார். அப்போது, தெலுங்கு மக்கள் குறித்து அவர் பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியது.

இந்த விவகாரம் தமிழ்நாடு மட்டுமல்லாது, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களிலும் விவாதப்பொருளான நிலையில், நடிகை கஸ்தூரி தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும் என்ற குரல் வலுத்தது. துவக்கத்தில் தனது கருத்தில் இருந்து பின்வாங்காமல் இருந்த கஸ்தூரி, ஒரு வழியாக வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

நடிகை கஸ்தூரி
நடிகை கஸ்தூரிpt web

இருப்பினும், சென்னை, மதுரை என தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. குறிப்பாக, அகில இந்திய தெலுங்கு சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் நந்தகோபால், கஸ்தூரிக்கு எதிராக எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், கஸ்தூரிக்கு சம்மன் கொடுக்க முயன்றபோது அவர் தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டு நடிகை கஸ்தூரியை தீவிரமாக தேடி வந்தனர்.

கஸ்தூரி
“அரைமனதோடு கோரப்படும் மன்னிப்பு ஏற்கனவே நடந்த சேதத்தை சரிசெய்துவிடாது” –கஸ்தூரி வழக்கில் நீதிமன்றம்

ஐதராபாத்தில் வைத்து கைது..

இந்தநிலையில், இன்று மாலை தெலங்கானா மாநிலத் தலைநகரமான ஐதராபாத்தின் கச்சிபௌலி என்கிற இடத்தில் தயாரிப்பாளர் ஒருவர் வீட்டில் வைத்து நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சாலை மார்க்கமாக நாளை காலை சென்னை அழைத்து வரப்பட உள்ளார் அவர். முன்னதாக, முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கஸ்தூரி தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷன் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com