18 வயதில் சினிமாவில் அறிமுகமான விஜய் 50 வயதில் அரசியல் களத்திற்குள் வந்தது எப்படி? நடந்தது என்ன?

18 வயதில் சினிமாவில் அறிமுகமான விஜய், 50 வயதில் அரசியல் களத்திற்குள் வந்தது எப்படி ? இதற்குள் நடந்த சர்ச்சைகளும், குழப்பங்களும், காட்சி மாற்றங்களும் தான் எத்தனை எத்தனை....
தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்முகநூல்
Published on

18 வயதில் சினிமாவில் அறிமுகமான விஜய், 50 வயதில் அரசியல் களத்திற்குள் வந்தது எப்படி ? இதற்குள் நடந்த சர்ச்சைகளும், குழப்பங்களும், காட்சி மாற்றங்களும் தான் எத்தனை எத்தனை....

2008-ல் ஈழத் தமிழர்களுக்காக முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் தான் விஜய் மீது முதன்முறையாக அரசியல் ஒளியைப் பாய்ச்சியது. அரசியலுக்கு வர விரும்புகிறார் என்பதை அடையாளம் காட்டியது. 2009-ல் விஜய் ரசிகர் மன்றம், விஜய் மக்கள் இயக்கமாக மாறியது. புதுக்கோட்டையில் நடைபெற்ற விஜய் மக்கள் இயக்கத்தின் தொடக்க விழா விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்பதை அறுதியிட்டுச் சொன்னது.

தவெக தலைவர் விஜய்
தமிழ்நாடு முழுவதும் ஆடுகள் விற்பனை அமோகம் - கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

அரசியல் என்பது பெரிய கடல்... அந்தக்கடலில் இறங்கும் முன் ஆழம் பார்க்க வேண்டும் என்றார் விஜய். இதனைத் தொடர்ந்து டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்து தொடர்ந்து பேசுபொருளாக இருந்தார். விஜய்க்கு அரசியல் பயிற்சியை ஊட்டியதில் தந்தை எஸ்.ஏ.சியின் பங்கு அளப்பரியது. ஆரம்ப காலத்தில் அரசியல் கொடுமைகளை வெளிச்சமிட்டு காட்டி, பொதுவுடமைச் சித்தாந்தத்தை தம் திரைப்படங்களில் காட்டியவர் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், பின்னாளில் தம் மகனும் அரசியலில் இறங்க ஆசைப்பட்டார்.

திமுக, அதிமுக என மாறி மாறி ஆதரவு... பாரதிய ஜனதாவின் எதிர்ப்பு என விஜயைச் சுற்றி அரசியல் சக்கரம் சுழன்று கொண்டேயிருந்தது. 1980களில் விஜயகாந்த் நடிப்பில் சட்டம் ஒரு இருட்டறை என்ற திரைப்படத்தை முதன்முதலாக இயக்கினார் சந்திரசேகர். படத்தின் தலைப்பே அரசியல் பேசியது. பின்னர் விஜயை குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்தார்.

நாளைய தீர்ப்பு
நாளைய தீர்ப்பு

விஜய்யின் பதின்பருவத்தில் அவரை நாயகனாக வைத்து, நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தை இயக்கினார். ஆனால், அந்தப்படம் வெற்றி பெறவில்லை. தளராத சந்திரசேகர் விஜய் நடிப்பில் செந்தூர பாண்டி என்ற படத்தை இயக்கினார். இந்தப்படத்தில் விஜயின் அண்ணணாக விஜயகாந்த் நடிக்க படம் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து விஜய் ரசிகர் மன்றத்தை தொடங்கிய சந்திரசேகர், அதன் தலைவராகவும் இருந்து வந்தார்.

பல நலத்திட்ட உதவிகள் வழங்கி விஜய்க்கு மக்கள் மத்தியில் ஆதரவை பெருக்கும் முயற்சியை நேர்த்தியாகச் செய்தார். 2011-ஆம் ஆண்டு வெளியான காவலன் படம் தொடங்கி விஜயின் பல படங்கள் சர்ச்சைகளை கடக்காமல் சென்றதில்லை. அரசியல் நிலைப்பாட்டை சொல்லாமல் முடிந்ததில்லை என்ற நிலையானது.

காவலன் பிரச்னை தொடர்பாக ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார் எஸ்.ஏ.சந்திரகேர். அதுவரை திமுக ஆதரவாளராகக் கருதப்பட்ட விஜய் அதிமுக ஆதரவாளராக மாறினார். 2011- ல் அதிமுகவும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதனைத் தொடந்து 2011- ஆம் ஆண்டு வெளியான வேலாயுதம் படத்தில் நான் ஆளும் கட்சி என்ற வசனத்தை பேசி தமது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார் விஜய் .

தவெக தலைவர் விஜய்
500 சிசிடிவி, 15 ஆயிரம் தன்னார்வலர்கள்.. தயார் நிலையில் தவெக மாநாடு திடல்! வியக்கும் ஏற்பாடுகள்!

2013-ஆம் ஆண்டு வெளியான தலைவா படத்திற்கான ட்ரைலிரில் டைம் டூ லீட்... என்ற சொற்றொடர் இடம்பெற்றது. இதனையடுத்து ஏற்பட்ட அரசியல் அழுத்தங்கள் காரணமாக படம் பல்வேறு இடையூறுகளைத் தாண்டி வெளியாகும் நிலை ஏற்பட்டது.

2014-ஆம் ஆண்டு ராஜபக்ஷவுடன் தொடர்புடையதாக கூறப்படும் லைகா நிறுவனம் கத்தி படத்தை தயாரித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் உள்ளிட்ட தமிழ்த்தேசிய அமைப்புகள் போராட்டம் நடத்தின. 2015-ல் விஜய் நடிப்பில் புலி வெளியான போது அவரது வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. இளைய தளபதியாக இருந்த விஜய் 2017- ல் வெளியான மெர்சல் திரைப்படத்தின் போது தளபதி என இணைப்பெயர் சூட்டிக்கொண்டார்.

இப்போது திமுகவினரின் எதிர்ப்பு கூடுதலானது. அதே திரைப்படத்தில் இடம்பெற்ற சில வசனங்கள் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவை அதிருப்தி அடையச் செய்தது. ஜோசப் விஜய் என அவரை மதரீதியாக அடையாளப்படுத்தி விமர்சனங்களை முன்வைத்தனர் பாஜகவினர். அப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விஜய்க்கு ஆதரவு தெரிவித்தார்.

2018-ஆம் ஆண்டு சர்க்கார் பாடல் வெளியிட்டு விழாவின் போது தாம் முதல்வரானால் நடிக்க மாட்டேன். உண்மையாக இருப்பேன் எனக் கூறியது மீண்டும் பேசுபொருளானது. 2019-ல் பிகில் பட வசூலில் வரி ஏய்ப்பு செய்ததாக விஜயிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த நேரத்தில் நெய்வேலியில் வேன் மீது ஏறி ரசிகர்களை சந்தித்து தமக்கான ஆதரவு எப்படியிருக்கிறது என மறைமுக பிரகடனம் செய்தார் விஜய்.

2021-ல் அரசியல் கட்சி தொடர்பாக தந்தைக்கும், மகனுக்கும் இடையே இருந்த கருந்து வேறுபாடு வெளிச்சத்துக்கு வந்தது. 2021-அகில இந்திய விஜய் மக்கள் கட்சியை எஸ்.ஏ.சி பதிவு செய்தார். ஆனால் தமக்கும், கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அறிவித்தார் விஜய்.

தவெக தலைவர் விஜய்
திருப்பூர் | முறைகேடாக உடைக்கப்பட்ட வாய்க்கால் கரை... வீடுகளுக்குள் புகும் தண்ணீர்... மக்கள் வேதனை!

தமது இயக்க கொடி மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் சென்றார் விஜய். தந்தை எஸ்.ஏ.சி உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கும் தொடர்ந்தார். விளைவு... அகில இந்திய விஜய் மக்கள் கட்சியை மொத்தமாக கலைத்தார் விஜய். ஆனாலும், விஜயே எதிர்பாராத நிகழ்வு அந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நடைபெற்றது.

அகில இந்திய விஜய் மக்கள் கட்சி கலைக்கப்பட்ட நிலையிலும், விஜய் மக்கள் இயக்கத்தினர் 169 இடங்களில் போட்டியிட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆச்சர்யமளித்தனர். இதன்பின்னர் நாடாளுமன்ற தேர்தலை தவிர்த்த விஜய் கடந்த பிப்ரவரி மாதம் கட்சியை அறிவித்தார். கோடிக்கணக்கானோரின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்போது கொள்கையை அறிவிக்கப் போகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com