சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில், விஜய் மக்கள் இயக்க அனைத்து மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை இன்று நடிகர் விஜய் சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
ஏற்கெனவே விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி, இளைஞரணி, வழக்கறிஞர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுடன் அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஷி ஆனந்த் ஆலோசனை மேற்கொண்டு இருந்தார்.
சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டத்திலிருந்தும் 150கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை நடிகர் விஜய் சந்தித்து ஆலோசனையை நடத்தி வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற நடிகர் விஜய் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளிவந்த நிலையில் விரைவில் அரசியல் கட்சி தொடங்க விஜய் மக்கள் இயக்கம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பூத் கமிட்டிகளை வலுப்படுத்த மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தி இருப்பதாகவும், தேர்தலை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்குமாறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
திருநெல்வேலி, தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று நடிகர் விஜய் நிவாரண உதவி என்பது குறிப்பிடத்தக்கது.