கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்குமார் குணமடைந்து இன்று வீடு திரும்பினார்.
மூத்த நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அவரது மனைவி ராதிகா சரத்குமார் மற்றும் மகள் வரலட்சுமி சரத்குமார் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உறுதி செய்திருந்தனர்.
இதையடுத்து ஹைதராபாத்திலுள்ள அப்போலோ மருத்துவமனையில் சரத்குமார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளதாக சரத்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது மகள் வரலட்சுமியும் அறிக்கை மூலம் இதை உறுதி செய்துள்ளார்.
இதுதொடர்பாக சரத்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''டிசம்பர் 8 அன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நான், 6 நாட்களுக்கு பிறகு இன்று மருத்துவமனையில் இருந்து குணமடைந்து திரும்புகிறேன்.