அடுத்தடுத்து ஆலோசனைக் கூட்டம் - புதிய கட்சியை வலுவாக கட்டமைக்க திட்டமிடும் ரஜினிகாந்த்

அடுத்தடுத்து ஆலோசனைக் கூட்டம் - புதிய கட்சியை வலுவாக கட்டமைக்க திட்டமிடும் ரஜினிகாந்த்
அடுத்தடுத்து ஆலோசனைக் கூட்டம் - புதிய கட்சியை வலுவாக கட்டமைக்க திட்டமிடும் ரஜினிகாந்த்
Published on

புதிய கட்சி தொடங்கும் வேலைகளை நடிகர் ரஜினிகாந்த் விரைவுபடுத்தியுள்ளார். இதற்காக ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வேகமெடுக்கும் ரஜினிகாந்த் கட்சிப் பணிகள் ஜனவரி மாதம் புதிய கட்சி தொடங்கப்படும் என்று ரஜினிகாந்த கடந்த வாரம் அறிவித்தார். அத்துடன் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தியையும் நியமித்தார்.

இதற்குபிறகு கடந்த ஆண்டு நிறுத்திவைக்கப்பட்ட ரஜினி மக்கள் மன்ற பூத் கமிட்டி உறுப்பினர்கள் சேர்க்கையை தொடங்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நேற்று தமிழருவி மணியன் மற்றும் அர்ஜூன மூர்த்தி ஆகியோருடன் ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை நடத்தினார். அதில் கட்சி தொடங்குவதற்கான பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து தலைமை நிர்வாகிகள் இருவரும் வட சென்னை சந்தானம், மத்திய சென்னை ஏ.வி.கே.ராஜா, தூத்துக்குடி ஏ.ஜே.ஸ்டாலின், காஞ்சிபுரம் ஜெயகிரிஷ்ணன் உள்ளிட்டவர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினர். அதில் ரஜினி மக்கள் மன்றத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரியில் கட்சி தொடங்குவதற்கு முன்பு மன்றத்தை வார்டு ரீதியாக வலுப்படுத்த வேண்டும் என்றும் ஆலோசனை செய்துள்ளனர். அதற்காக தனி குழு அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் தம்முடைய கட்சிக்கு, திராவிட கட்சிகளுக்கு நிகராக, வலுவான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார். அதற்கான பணிகளை விரைவில் செயல்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளார். இதனால் ரஜினி மக்கள் மன்றத்தில் வேலைகளும், கட்சி தொடங்குவதற்கான வேலைகளும் வேகமெடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com