தன்னைப்பற்றி சர்ச்சையாக பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ராதிகா சரத்குமார் பேசியுள்ளார்.
திமுக பேச்சாளாரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடந்த ஆண்டு சர்ச்சைக்குரிய வகையில் தொடர்ந்து பேசியதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். மேலும் நடிகை குஷ்பூ மற்றும் ஆளுநர் குறித்து கடுமையாக பேசிய அவர், கைதாகி விடுதலை செய்யப்பட்டார். மக்களவை தேர்தலுக்கு முன்னதாக அவர் தனது செயலுக்கு மன்னிப்புக்கேட்டதைத் தொடர்ந்து மீண்டும் அவர் திமுகவில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், பாஜகவில் தனது கட்சியை இணைத்த சரத்குமார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பகிர்ந்த நடிகையும் விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளருமான ராதிகா சரத்குமார், சிவாஜி கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சிறைக்குச் சென்றும் அவர் திருந்தவில்லை என்றும் இவரைப்போன்ற ஆட்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என்றும் ராதிகா குறிப்பிட்டுள்ளார்.