கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களின் 30% சிறப்புத் தள்ளுபடி விற்பனையையும், சிறப்பு கைத்தறிக் கண்காட்சி மற்றும் விற்பனையினையையும், திருச்சி இந்திய மருத்துவ மன்ற வளாகத்தில் (IMA அரங்கம்) மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தொடங்கிவைத்தார்.
இக்கண்காட்சியில் அனைத்து வகையான பட்டு சேலைகள், பட்டு வேஷ்டிகள், போர்வைகள், தலையணை உறைகள், அலங்கார பொருட்கள், ஜமுக்காளம் உள்ளிட்ட பல்வேறு வகையான கைத்தறி துணிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் அனைத்து துணி வகைகளுக்கும் 30 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனையை தொடங்கி வைத்த திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, செய்தியாளர்களிடம் பேசுகையில் “இந்தாண்டு கைத்தறிக் கண்காட்சியில் ஒரு கோடி ரூபாய்க்கு துணிகளை விற்பனை செய்வதற்கான இலக்கு நிர்ணகிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் 410 பழுதடைந்த கட்டடங்கள் கண்டறியப்பட்டதில், பழுது நீக்குவதற்கான தகுதியான 130 கட்டடங்களை தவிர எஞ்சிய 280 கட்டிடங்கள் இடிக்கப்பட்டுவிட்டது.
திருச்சியில் கொரோனா முதல் தவணை தடுப்பூசி 87 விழுக்காடும், இரண்டாவது தவணை தடுப்பூசி 58 விழுக்காடும் போடப்பட்டுள்ளது. இதுவரை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத அனைவரும் தடுப்பு ஊசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். ஓமைக்ரான் பாதிப்பு கடுமையாக இல்லை. அதே சமயம் ஓமைக்ரான் வேகமாகப் பரவக் கூடியதாக இருக்கிறது. அரசின் விதிமுறைகளை மீறி விடுமுறை காலங்களில் வகுப்புகளை நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 50 விழுக்காட்டினர் முக கவசம் அணிந்து கொள்ளாதவர்களாக இருப்பது வேதனையளிக்கிறது. அனைவரும் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும். நோய்தொற்று பரவலை கணக்கில் கொண்டு, ஊரடங்கு தளர்வுகளை அதிகமாக்குவதா குறைப்பதா என்பதனை மாநில அரசு முடிவு செய்யும்” என்று தெரிவித்தார்.
சமீபத்திய செய்தி: சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகளை அகற்ற உத்தரவு