குழந்தை தொப்புள் கொடி தொடர்பான வீடியோ: புதிய சர்ச்சையில் இர்ஃபான்.. மருத்துவத்துறை அதிரடி நடவடிக்கை!

சமீபத்தில் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்ஃபான், தற்போது மீண்டும் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கி இருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.
இர்ஃபான்
இர்ஃபான்முகநூல்
Published on

தமிழ்நாட்டைச் சேர்ந்த யூட்யூபர் இர்ஃபான், Food Vlogger-ஆக உலகளவில் பிரபலம். யூட்யூபில் மட்டும் 4 மில்லியனுக்கு அதிக ஃபாலோயர்களை கொண்ட இர்ஃபான், இன்ஸ்டா - முகநூல் போன்றவற்றிலும் செம பிரபலம்.

இதனால் இவரின் ஒவ்வொரு வீடியோவும் ஒவ்வொரு சமூகவலைதளத்திலும் எப்படியாவது குறைந்தபட்சம் 1 மில்லியன் வியூஸைத் தொட்டுவிடும். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், இந்த வருட தொடக்கத்தில் தன் மனைவி கருவுற்றிருப்பதை அறிவித்தார் வீடியோ மூலம் யூ-ட்யூபில் இர்ஃபான்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் கருவிலுள்ள குழந்தையின் பாலினத்தை வெளிநாட்டிற்கு (துபாய்) சென்று கண்டறிந்தார் இர்ஃபான். அதனை வீடியோவாகவும் வெளியிட்டிருந்தார். இந்தியாவில் சிசுவின் பாலினம் அறிவதும், அறிவிப்பதும் பாலின 1994 PCPNDT ACT 1994, Central Act 57 of 1994-ன் படி தடை செய்யப்பட்டுள்ளது என்பதால், இர்ஃபானின் செயல் சட்டப்படி குற்றமாக கருதப்பட்டது.

இர்ஃபான் விவகாரம் தொடர்பான அறிக்கை
இர்ஃபான் விவகாரம் தொடர்பான அறிக்கை

இதனால், தமிழக அரசு அறிக்கை வாயிலாக இர்ஃபானுக்கு எச்சரிக்கை விடுத்தது. இருப்பினும், இர்ஃபான் மன்னிப்பு கேட்டு வீடியோவை நீக்கியதால் அவர் மீதான சட்டப்படியான நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.

இர்ஃபான்
ஈரோடு: உரிய அனுமதியின்றி வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த இளைஞர் கைது

இந்தநிலையில் நேற்று தனது யூட்டியூப் பக்கத்தில், தனது மனைவி பிரசவத்துக்காக வீட்டிலிருந்து மருத்துவமனை சென்றது தொடங்கி, பிரசவ அறையில் குழந்தை பெற்றெடுத்தது வரை.... அனைத்து நிகழ்வுகளையும் வீடியோவாக வெளியிட்டிருக்கிறார் இஃப்ரான்.

அதிலும் அந்த வீடியோவில் குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டுவதுபோல உள்ளது. அதுவும் மருத்துவரே, கத்திரிக்கோலை இர்ஃபானிடம் கொடுக்கிறார். இந்த வீடியோ நேற்று வெளியான நிலையில், சர்ச்சையாக மாறியுள்ளது. அறுவை சிகிச்சை நடந்த இடத்தில், கேமராமேனுடன் சென்று இர்ஃபான் எப்படி அனுமதிக்கப்படலாம் என்ற கேள்வியும் எழுந்தது. தொடர்ந்து வீடியோவாக இதை வெளியிட்டதும் சர்ச்சையானது.

இந்தநிலையில், யூடியூபில் வெளியான வீடியோவை நீக்கக் கோரி மருத்துவத் துறை சார்பில் தற்போது இர்ஃபானுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இர்ஃபான் வீடியோ தொடர்பாக மண்டல சுகாதாரத் துறை அலுவலர்கள் மூலம் விசாரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இர்ஃபான் மீது புகார் அளிக்க இருப்பதாக மருத்துவம், கிராமப்புற சேவை இயக்குநர் ராஜமூர்த்தி தகவல் அளித்துள்ளார்.

இர்ஃபான்
சுவாமிமலையில் பக்தர்கள் மீது தண்ணீர் அடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு: அமைச்சர் சேகர்பாபு கொடுத்த பதில்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com