தமிழ்நாடு
சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் ஏற்படும் விபத்து; கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமா அரசு?
மாடுகள் பிடித்து செல்லப்பட்டு திருச்சிக்கு அருகில் உள்ள கோனக்கரைப் பகுதியில் 4000 சதுர அடியில் உள்ள காப்பகத்தில் சேர்க்கப்படுகிறது. இதற்காக மாட்டின் உரிமையாளருக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.
சாலைகளில் நடமாடக்கூடிய கால்நடைகளால் அவ்வப்போது விபத்துகளை சந்திப்பதாக மதுரை மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மதுரையில் கால் நடைகளால் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 193 வழக்குகள் பதிவாகி உள்ளது. இதில் 20 விபத்துகள் மாடுகளாலும், குதிரைகளாலும் ஏற்பட்டது இந்த 20 விபத்தில் 9 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இது போன்ற நிகழ்சிகள் அதிகளவு மதுரையில் நடந்து வருகிறது.
திருச்சியில் மாநகராட்சி சார்பாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க சிறப்பு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் மாடுகள் பிடித்து செல்லப்பட்டு திருச்சிக்கு அருகில் உள்ள கோனக்கரைப் பகுதியில் 4000 சதுர அடியில் உள்ள காப்பகத்தில் சேர்க்கப்படுகிறது. இதற்காக மாட்டின் உரிமையாளருக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.
இதைப்பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள காணொளியை பார்க்கலாம்