ஹரியானா தேர்தல் | நான்காம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு; களத்தில் தீயாய் செயல்படும் ஆம் ஆத்மி

ஹரியானா சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ஆம் ஆத்மி கட்சி நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஹரியானா தேர்தல்
ஹரியானா தேர்தல்முகநூல்
Published on

ஹரியானா சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ஆம் ஆத்மி கட்சி நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஹரியானாவில் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், பாஜக தரப்பில் யோகேஷ் பைராகி ஆகியோர் போட்டியிடும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் கவிதா தலால் களம் இறக்கப்பட்டுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி
ஆம் ஆத்மி கட்சி

அம்பாலா கண்டோன்மெண்ட் தொகுதியில் ராஜ் கௌர் கில்லும், கர்னல் தொகுதியில் சுனி பிண்டலும் போட்டியிடுகின்றனர். காங்கிரஸுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கடந்த 9ஆம் தேதி வெளியிட்டது.

ஹரியானா தேர்தல்
அமெரிக்கா | மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி.. கண்டனம் தெரிவித்த அமித் ஷா!

இதுவரை ஆம் ஆத்மி சார்பில் 61 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பரப்புரைக்கான நட்சத்திர பேச்சாளர் பட்டியலையும் ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது. ஹரியானாவில் அக்டோபர் 5ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com