ஆடிப்பெருக்கு: கரைபுரண்டோடும் காவிரி – புதுமண தம்பதிகள் உற்சாக கொண்டாட்டம்

காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதை அடுத்து திருவையாறு காவிரி புஷ்ப மண்டப படித்துறையில் ஏராளமான புதுமண தம்பதிகள் ஆடி 18 விழாவை உற்சாக கொண்டாடி வருகின்றனர்.
ஆடி 18
ஆடி 18pt desk
Published on

செய்தியாளர்: ந.காதர்உசேன்

கடந்த வாரம் மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் ஆடி 18 மற்றும் டெல்டா மாவட்ட சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கல்லணையில் இருந்து காவிரி வென்னாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஆறுகளில் தண்ணீர் முழு கொள்ளளவுடன் செல்வதால் மகிழ்ச்சியுடன் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடி வருகின்றனர்.

Adi 18 celebration
Adi 18 celebrationpt desk

திருவையாறு காவிரி ஆறு புஷ்ப மண்டப படித்துறையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள ஏராளமான பொதுமக்கள் மற்றும் புதுமண தம்பதிகள் குடும்பத்துடன் வந்து ஆடிப்பெருக்கு விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். காவிரி படித்துறையில் பழங்கள் பூ சந்தனம் உள்ளிட்டவை வைத்து சிறப்பு வழிபாடு செய்து தாலி பிரித்து கட்டியும் வழிபாடு செய்து வருகின்றனர்.

ஆடி 18
திருமணம் பற்றிய பட்டப்படிப்பு: அறிமுகப்படுத்தும் சீனப் பல்கலைக்கழகம்.. விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

இதனால் ஆடி 18 மற்றும் ஆடி அமாவாசையை முன்னிட்டு திருவையாறு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் யாரும் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தியதோடு, பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். தீயணைப்புத் தறையினரும் பாதுகாப்பு உபகரணங்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com