குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். அறிஞர் அண்ணா பிறந்தநாளில் அவர் படித்த காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் திட்டத்தை தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக காஞ்சிபுரத்தில் இருக்கும் அண்ணாவின் நினைவு இல்லத்துக்கு சென்ற அவர், அண்ணாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது, அங்கிருந்த வருகை பதிவேட்டில், கையெழுத்திட்டவர், “பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று திராவிட மாடலின் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் தொடங்கி வைப்பதில் பெருமையடைகிறேன்” என்று எழுதியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.