சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் வேப்பூரில் வசிக்கும் ஜெய்சங்கர் என்பவரின் நிலத்தை செல்லம்மாள் (60), முனுசாமி(65) தம்பதியினர் குத்தகைக்கு எடுத்து மக்காச்சோளம் பயிர் செய்து வந்தனர். இதையடுத்து காட்டுப்பன்றி, மான்கள், குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பயிர்களை நாசம் செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் வன விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க விளைநிலத்தை சுற்றிலும் மின்வேலி அமைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இவர்களின் விளைநிலத்தில் கலைச்செல்வி(32) என்பவர் மாட்டுக்கு தீவனத்திற்காக புல் அறுக்க சென்றுள்ளார். அப்போது சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி கலைச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேப்பூர் காவல்துறையினர் செல்லம்மாள் மற்றும் முனுசாமி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.