ரேசன் கடையில் பெண்ணுக்கு பாலியல் சீண்டல் : விற்பனையாளரை பிடித்த மக்கள் !

ரேசன் கடையில் பெண்ணுக்கு பாலியல் சீண்டல் : விற்பனையாளரை பிடித்த மக்கள் !
ரேசன் கடையில் பெண்ணுக்கு பாலியல் சீண்டல் : விற்பனையாளரை பிடித்த மக்கள் !
Published on

வேலூரில் ரேசன் கடைக்கு பொருட்கள் வாங்க பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தந்த விற்பனையாளரை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த பெருங்கலுத்தூரில் செயல்பட்டு வரும் நியாவிலைக் கடையின் விற்பனையாளராக செல்வம் என்பவர் பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் இன்று கடை திறக்கப்பட்டிருந்தது. அப்போது பெண் ஒருவர் ரேஷன் பொருட்கள் வாங்க கடைக்கு சென்ற போது, அவரிடம் விற்பனையாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக அந்தப் பெண் அவரது கணவர் மற்றும் உறவினரிடம் கூறி அழுதுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்ணின் கணவர், உறவினர்கள் மற்றும் மக்கள் ரேஷன் கடையில் விற்பனையாளரை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கிராம மக்களுடன் பேசி விற்பனையாளரை விடுவித்தனர். அப்போது திடீரென கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு பெண், அந்த விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி தலையில் மண்ணெண்ணய் ஊற்றி தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.

அங்கிருந்த காவலர்கள் அப்பெண்ணை தடுத்து நிறுத்தினர். இதனால் சம்பவ இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தை நடத்திய காவலர்கள், விற்பனையாளர் செல்வம் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து, அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். இதனால் நிதான மனநிலைக்கு திரும்பிய மக்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தற்போது அரக்கோணம் காவல்நிலையத்தில், செல்வத்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com