சென்னை தண்டையார்பேட்டை சேர்ந்தவர் ஜேம்ஸ்பால். இவருடைய மனைவி புவனா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சென்னையில் சரியான வேலை இல்லாததால் கடந்த பிப்ரவரி மாதம், துபாயில் உள்ள ஒரு வீட்டில் பணிப்பெண் வேலை செய்வதற்காக சென்னை சூளைமேட்டில் உள்ள வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பும் ஏஜென்டை அணுகியுள்ளார்.
அப்போது புவனாவிடம் மருத்துவ பரிசோதனை செய்வதற்காக பத்தாயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு மருத்துவ பரிசோதனை முடித்து அந்த ஏஜென்ட் மூலம் குவைத்தில் உள்ள ஒருவர் வீட்டில் பணி பெண்ணாக வேலைக்கு சேர்ந்துள்ளார். ஆனால், வீட்டின் உரிமையாளர் சொன்னபடி ஊதியம் கொடுக்காமல் குறைந்த அளவிலே ஊதியம் கொடுத்துள்ளார். மேலும் அதுமட்டுமின்றி தினமும் 15 மணி நேரம் அவருக்கு வேலை கொடுக்கப்பட்டு கழிவறையில் அவர் தங்குவதற்காக இடம் ஒதுக்கப்பட்டு அவர் பணிச்செய்யும் வீட்டின் உரிமையாளர் மூலம் பல்வேறு சித்திரவதைகளை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில், புவனா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகி, தன்னை தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அது மட்டுமின்றி மத்திய அரசு மற்றும் தமிழக அரசிடமும் தன்னை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுவரை நடவடிக்கை எடுக்காததால் ஒரு தனியார் நிறுவனத்திற்கு தான் அனுபவித்து வரும் சித்திரவதைகள் குறித்து வீடியோ பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் பல்வேறு சித்திரவதைகள் இன்னல்களை சந்தித்து வரும் தன்னை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிவிடுத்துள்ளார்.