தென்காசி | ஊர்க்கிணறு மற்றும் தமிழர்களின் கலை நுணுக்கத்தை பறைசாற்றும் கல்வெட்டு கண்டெடுப்பு!

தென்காசி அருகே 20 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஊர்க்கிணறு மற்றும் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
,கல்வெட்டு, ஊர்க்கிணறு
,கல்வெட்டு, ஊர்க்கிணறுpt desk
Published on

செய்தியாளஎர்: சு.சுந்தரமகேஷ்

தென்காசி அருகே நன்னகரத்தில் 20ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இக்கல்வெட்டை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி கூறுகையில்,

இக்கல்வெட்டை ஆய்வு செய்த போது, இந்த கல்வெட்டு கொல்லம் ஆண்டு 1081 சித்திரை மாதம் 18 ஆம் தேதி பொறிக்கப்பட்டது தெரிய வந்தது. இதற்கு இணையான ஆங்கில ஆண்டு 1906 மே 1 ஆகும். கல்வெட்டின் தொடக்கத்தில் சூலம் பொறிக்கப்பட்டுள்ளது. உ எனும் பிள்ளையார் சுழியுடன் கல்வெட்டு தொடங்குகிறது.

ஊர்க்கிணறு
ஊர்க்கிணறுpt desk

நன்னகரம் ஊர்க்குடும்பு அமைப்பைச் சேர்ந்த மாடக் குடும்பன் முயற்சியினால் சத்தக்காரன் ஆனைமுத்து, நல்லமுத்துக் குடும்பன் ஆகியோரும் நன்னகரம் ஊரும் கூடி இந்த ஊர்க்கிணறு வெட்டி, சுற்றுக் கட்டடம் கட்டியதை இக்கல்வெட்டு 10 வரிகளில் தெரிவிக்கிறது. தென்காசி நன்னகரம் கேரளத்துக்கு அருகாமையில் உள்ள பகுதியாகையால் இக்கல்வெட்டு வழக்கமான தமிழ் ஆண்டைக் குறிக்காமல் மலையாள கொல்லம் ஆண்டைக் குறிப்பிடுகிறது.

,கல்வெட்டு, ஊர்க்கிணறு
சென்னை: வடமாநில கர்ப்பிணிக்கு ஓடும் ரயிலில் பிரசவம்... தாய் சேய் நலம்!

இக்கல்வெட்டில் "குடும்பு" என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல் தமிழர்களின் நீண்ட நெடிய வரலாற்றுத் தொடர்ச்சி கொண்ட ஒரு சொல்லாகும். தமிழ்க் குடும்பர்களின் சமூக அமைப்பைச் சுட்டும் இச்சொல் சங்ககாலம் தொட்டு தற்போது வரை நடைமுறையில் உள்ள ஒரு வழக்கத்தைக் குறிக்கும் சொல். மனித இனத்தின் நாகரீக வளர்ச்சி தொடங்கிய காலத்தில் சமூக குடும்ப அமைப்பை உலகில் முதன் முதலில் ஏற்படுத்தியவர்கள் தமிழர்கள் என்பதற்கு இச்சொல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

கல்வெட்டு
கல்வெட்டுpt desk

குடும்பு எனும் சொல் கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருப்பரங்குன்றக் கல்வெட்டிலும் கி.பி. 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பூலாங்குறிச்சி கல்வெட்டிலும் கி.பி.10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உத்தரமேரூர் கல்வெட்டிலும் கையாளப்பட்டுள்ளது. கல்வெட்டின் கீழ்ப்பகுதியில் புடைப்புச் சிற்பமாக தூண்களின் உச்சியில் அமைக்கப்படும் 'போதிகை' என்ற சிற்பமுறை அமைக்கப்பட்டுள்ளது. இது இவ்வூர் மக்களின் கலைமேல் உள்ள ஆர்வத்தையும் கலை நுணுக்கத்தையும் பறை சாற்றுகிறது.

,கல்வெட்டு, ஊர்க்கிணறு
கேரளா | கழிவுநீர் ஓடையில் சிக்கிய தூய்மை பணியாளர்; 24 மணி நேரம் ஆகியும் மீட்டெடுக்க முடியாத அவலம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com