100க்கும் மேற்பட்டோரை 6 மாதமாக ஒதுக்கி வைத்த கிராமம் - என்ன காரணம் தெரியுமா?

100க்கும் மேற்பட்டோரை 6 மாதமாக ஒதுக்கி வைத்த கிராமம் - என்ன காரணம் தெரியுமா?
100க்கும் மேற்பட்டோரை 6 மாதமாக ஒதுக்கி வைத்த கிராமம் - என்ன காரணம் தெரியுமா?
Published on

இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய கொலையாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோரை 6 மாதங்களாக ஊருக்குள் வரவிடாமல் கிராம பஞ்சாயத்து ஒதுக்கி வைத்துள்ளது. 

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நீடுர் கீழத்தெருவில் நாட்டாமை பதவிக்காக இரு தரப்பினரிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதையடுத்து பெண்ணை கிண்டல் செய்தது தொடர்பாக இருத்தரப்பினரிடையே கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் நாட்டாமை இளங்கோவனின் மகன்கள் இளவரசன், தங்கமணி ஆகியோர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக கண்ணதாசன், கஜேந்திரன், ஆனந்தகுமார், நவீன்ராஜ் உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளனர். 

ஆனால், அவர்களையும் அவர்களின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோரையும் கிராமத்திற்குள் நுழைய விடாமல் கிராம பஞ்சாயத்தார்கள் கடந்த 6 மாதங்களாக தடுத்து வருகின்றனர். இதுகுறித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் கண்மனி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஏற்கனவே 8 முறை சம்மன் அனுப்பப்பட்டும், கிராம நாட்டாமைகள் தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை. 

அதன் தொடர்ச்சியாக இன்றும் நாட்டாமை தரப்பினர் கூட்டத்தில் பங்கேற்காததால் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதனால் கடந்த 6 மாதங்களாக கிராமத்திற்குள் செல்லாமல் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பரிதவிப்பதாக புகார் தெரிவிக்கின்றனர். வருகின்ற 22-ஆம் தேதி மீண்டும் அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com