கீழடி 7ம் கட்ட அகழாய்வில் தொட்டி போன்ற அமைப்பு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி 13 முதல் தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது. இயக்குனர் சிவானந்தம், இணை இயக்குனர் பாஸ்கரன் தலைமையில் நடந்து வரும் பணியில் கீழடியில் இருவண்ண பானைகள், பானை ஓடுகள், பகடை, கல் உழவு கருவி உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுவரை தோண்டப்பட்ட 7 குழிகளில் 6-வது குழியில் தொட்டி போன்ற அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கீழடியில் சாயப்பட்டறைகள் இருந்திருக்ககூடும் என்ற கருத்திற்கு இந்த தொட்டி வலு சேர்த்துள்ளது கணேசன் என்பவரது நிலத்தில் தோண்டப்பட்ட 7 குழிகளில் 6-வது குழியில் 44 செ.மீ உயரமும் 77 செ.மீ அகலமும் உடையது, இன்னும் பணி முழுமையடையவில்லை முழுவதுமாக தோண்டும் போது உயரம் அகலம் இன்னும் அதிகரிக்க கூடும் என அகழ்வாராய்ச்சி வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.