மக்களிடம் தவறான தகவலை பரப்பியதாக திமுக நிர்வாகி கைது

மக்களிடம் தவறான தகவலை பரப்பியதாக திமுக நிர்வாகி கைது
மக்களிடம் தவறான தகவலை பரப்பியதாக திமுக நிர்வாகி கைது
Published on

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதியை பயன்படுத்தபோவதாக மக்களிடம் தவறான தகவலை பரப்பியதாக திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்கவைத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டு சொந்த ஊர் அனுப்பும் பணியானது நடந்து வருகிறது. அந்த வகையில் மதுரையிலும், பிற மாவட்டங்களில் இருந்து வரும் நபர்களை ஆட்சியரின் உத்தரவின் படி வடபழஞ்சியில் அமைந்துள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதியில் தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.


இந்நிலையில் நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த திருப்பரங்குன்றம் ஒன்றிய திமுக துணை தலைவர் இந்திரா என்பவரின் கணவரும் திமுக உறுப்பினருமான ஜெயக்குமார் என்பவர் காமராஜர் பல்கலைக்கழக விடுதியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இருப்பதாக பொது மக்களிடம் தகவலை பரப்பியதோடு அவர்களை கல்லூரி முன்பு போராட்டம் நடத்தவும் அழைப்பு விடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை கேட்டறிந்த வடபழஞ்சி கிராம நிர்வாக அலுவலர் முனியாண்டி நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார். இந்நிலையில் அவர் பொதுமக்களை ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவதற்கு முன்பாகவே அவரை நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் ராமநாராயணன் கைது செய்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com