கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கூடங்குளம் ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கூடங்குளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் சார்பில் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில், கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் பூமிக்கு அடியில் 10 முதல் 15 அடி ஆழத்தில் அணுக்கழிவை சேமிக்கும் மையம் அமைக்க அகழாய்வு பணி நடந்து வருவதாகவும் இதனால் அணு கதிர்வீச்சு ஏற்பட்டு மனித குலத்துக்கும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அணுக்கழிவு அமைவதைத் தடுக்க ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுமாறு மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்தக் கோரிக்கை ஒருமனதாக ஏற்கப்பட்டு, ஊராட்சி மன்றக் கூட்டத்திலும் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து திங்களன்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திக்கவும் முடிவெடுக்கப்பட்டது.
இதையும் படிக்க: தொட்டியம் பேரூராட்சி துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த திமுக கவுன்சிலர்