காசிக்கு அனுப்பிவைக்ககோரி ஒருவர் அரை நிர்வாணமாக மாவட்ட ஆட்சியர் வினய்யிடம் கோரிக்கை வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
காசியை சேர்ந்த ரகுவர்தாஸ் பாபா மற்றும் கமலாதாஸ் அகாரி ஆகியோர் கடந்த மார்ச் 18 ம் தேதி மதக் கருத்துக்களை பரப்புவதற்காகவும், காசியின் புனித நீரை இராமேஸ்வரம் கடலில் கலந்து விட்டு சாமி தரிசனம் செய்யவதற்காக தமிழகம் வந்துள்ளனர்.
ஆனால் கொரானா வைரஸ் எதிரொலியாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் இவர்கள் இராமேஸ்வரத்திலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக இராமேஸ்வரத்திலேயே அலைந்து கொண்டிருந்த இவர்கள், மதுரை ஆட்சியரை சந்தித்தால் அவர் தங்களை ஊர் அனுப்புவதற்கான நடவடிக்கையை எடுப்பார் எனக் கருதி மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர்.
ஆனால், ஆட்சியர் தொடர் நிகழ்ச்சிகள் காரணமாக காலை முதல் மதியம் வரை அலுவலத்திற்கு வர வில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆட்சியரை சந்திக்க வெகுநேரமாக காத்திருந்த ரகுவர்தாஸ் பாபா எனபவர் மாவட்ட ஆட்சியர் வினய் அவர்களின் கார் வருவதை கண்டவுடன் அரை நிர்வாணமாக இந்தியில் எழுதப்பட்ட கோரிக்கை மனுவோடு நின்றார். அவரிடம் மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.