வாட்டி வதைத்த வறுமை.. தாயின் சடலத்தை குப்பையில் வீசிய மகன் 

வாட்டி வதைத்த வறுமை.. தாயின் சடலத்தை குப்பையில் வீசிய மகன் 
வாட்டி வதைத்த வறுமை.. தாயின் சடலத்தை குப்பையில் வீசிய மகன் 
Published on

தூத்துக்குடியில் இறந்த தன் தாயின் உடலை அடக்கம் செய்ய பணமில்லாமல் பூசாரி ஒருவர் உடலை குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி தனசேகரன் நகர் பகுதியில் பிரதான சாலையில், குப்பை தொட்டி ஒன்றில் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் அந்த உடலை மீட்டனர். இறந்தவர், அதே பகுதியைச் சேர்ந்த ‌55 வயதான வசந்தி என்பது விசாரணையில் தெரியவந்தது. 

இதையடுத்து வசந்தியின் மகன் முத்து லட்சுமணனை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது கடந்த 4 ஆண்டுகளாக தாய் வசந்தி உடல்நிலை சரியில்லாமல்‌ இருந்ததாகவும் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி செலவு செய்தும் பலனின்றி இறந்துவிட்டதாகவும் முத்துலட்சுமணன் தெரிவித்தார். 

தாயின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாததால் போர்வையில் சுற்றி குப்பைத்தொட்டியில் வீசியதாக முத்து லட்மணன் தெரிவித்துள்ளார். வசந்தியின் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், வசந்தி இயற்கையாக இறந்தது தெரியவந்ததையடுத்து மகனிடம் தாயின் உடல் ஒப்படைக்கப்பட்டது. 

போதிய வருவாய் இல்லாமல், தந்தையை காப்பகத்திற்கு அனுப்பிவைத்த முத்துலட்சுமணன், தாயின் உடலை அடக்கம் செய்ய பணமில்லாமல்,‌ குப்பைத்தொட்டியில் வீசிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com