சாதிக்கும் ஆர்வம் இருந்தால் போதும், எதுவும் தடையல்ல என்று நிரூபித்து வருகிறார் மாற்றுத்திறனாளி ஒருவர்.
நாகையை அடுத்த அந்தணப்பேட்டையை சேர்ந்த முரளி சங்கருக்கு 40 வயதாகிறது. பிறவியிலேயே கால்கள் செயலிழந்த இவர், தனது மாற்றுத்திறனால் முடங்கிவிடாமல் ஐடிஐ எலக்ட்ரானிக் படித்தார். படித்து முடித்தபின், அரசு நலத்திட்டம் மூலம் கடனுதவி பெற்று ஜெராக்ஸ் இயந்திரங்களை விற்பது, பழுது பார்ப்பது போன்ற வேலையை செய்துவருகிறார்.
Read Aslo -> போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளித்த பெண் உயிரிழப்பு!
நாகை, திருவாரூர், கடலுார், தஞ்சாவூர் என எங்கும் தனது இருசக்கர வாகனத்திலேயே சென்று பழுது பார்த்து தொழிலை விரிவுபடுத்தியுள்ளார். இதுமட்டுமின்றி விளம்பரத்திற்கு பின்னணி குரல் தருவது மற்றும் மிமிக்ரி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என தனது நேரத்தை திட்டமிட்டு செலவழிக்கிறார். மாற்றுத்திறனால் மனம் நொந்துவிடாமல், தனது தொழிலில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு இவர் அனைவருக்கும் முன்னுதாரணமாக இருந்து வருகிறார்.