மதுரை திருமலை நாயக்கர் மகாலில் படப்பிடிப்பு, போட்டோ சூட் நடத்த நிரந்தர தடை விதித்து, தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது.
கி.பி.1636 ஆம் ஆண்டு திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்ட திருமலை நாயக்கர் மகால் மதுரையின் அடையாளமாக திகழ்ந்து வருகிறது. இந்த மகாலை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு ஏராளமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களை எடுக்க நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இருப்பினும் எந்த வித அனுமதியின்றி குறும்படம் மற்றும் போட்டோ ஷீட் எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், திருமலை நாயக்கர் மகாலில் படப்பிடிப்பு, போட்டோ சூட் எடுக்கவும், ட்ரோன் பறக்க விடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.