மீம்ஸ் மூலம் “திருக்குறள்” - இப்படியும் யோசிக்கலாமே..!

மீம்ஸ் மூலம் “திருக்குறள்” - இப்படியும் யோசிக்கலாமே..!
மீம்ஸ் மூலம் “திருக்குறள்” - இப்படியும் யோசிக்கலாமே..!
Published on

தற்போதைய நவீன உலகத்தில் மனிதர்களின் நேரத்தை விழுங்கும் பூதமாக இருக்கிறது சமூக வலைத்தளங்கள். இந்த சமூக வலைத்தளங்கள் பலரையும் சமூகத்துடன் ஒன்றிவிடாமல் செய்து விடுகின்றன. இதில் நல்லது, கெட்டது, தேவையானது, தேவையற்றது, தர்ம சங்கடமானது என நாள்தோறும் பல நூறு பதிவுகளை நாம் கடந்து செல்கிறோம். 

இப்பேற்பட்ட சமூக வலைத்தளங்களில் கதாநாயகனாக வலம் வருபவை மீம்ஸ்கள். அரசியல், விளையாட்டு, திரைப்படம், நடிகர்கள், நடிகைகள், கருத்துகள், காமெடிகள் என எதை வேண்டுமானாலும் ஒரு மீம்ஸில் நகைச்சுவையாக கூறிவிடலாம். இப்படிபட்ட மீம்ஸ்கள் மூலம் வெறும் நகைச்சுவைகள் மட்டுமின்றி நல்ல கருத்துக்களையும் கூற முடியும் என அவ்வப்போது சில நெட்டிசன்கள் நிரூபித்து வருகின்றனர்.

அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் மூலம் திருக்குறளை ஒரு நெட்டிசன் கூறியுள்ளார். 

துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் 
துப்பாய தூவும் மழை 

என்ற திருக்குறளை வடிவேலு காமெடியுடன் ஒப்பிட்டு மீம்ஸாக மாற்றியுள்ளார். தமிழ்ப்பொதுமறை என்ற திருக்குறள் நூலை மீம்ஸ் மூலம் சித்தரிப்பதாக என்ற கேள்வி இங்கே எழுந்தாலும், மீம்ஸ்களை இப்படி ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்த முடியும் என்ற மற்றொரு எண்ணம் இங்கே தோன்றுகிறது. இதேபோன்று மேலும் சில குறள்களையும் அந்த நெட்டிசன் வடிவமைத்திருக்கிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com