முறுக்கு வியாபாரியின் கவனத்தை திசை திருப்பிய மர்மநபர் - கடைசியில் நடந்த சோகம்

முறுக்கு வியாபாரியின் கவனத்தை திசை திருப்பிய மர்மநபர் - கடைசியில் நடந்த சோகம்
முறுக்கு வியாபாரியின் கவனத்தை திசை திருப்பிய மர்மநபர் - கடைசியில் நடந்த சோகம்
Published on

உசிலம்பட்டியில் பட்டப்பகலில் சாலையில் 70 ரூபாய் கிடப்பதாக ஆசை வார்த்தைக் கூறி அதை எடுக்க முயன்ற வியாபாரியிடமிருந்து 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை மர்மநபர் ஒருவர் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மலைப்பட்டியைச் சேர்ந்தவர் பால்ராஜ். பெங்களூரில் முறுக்கு வியாபாரம் செய்து வரும் இவர், தனது சொந்த ஊரான மலைப்பட்டிக்கு வந்துவிட்டு இன்று பெங்வகளூருவிற்கு செல்வதற்காகவும், தொழில் வளர்ச்சிக்காகவும் தனது வங்கி கணக்கிலிருந்த 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை வங்கியிலிருந்து ரொக்கமாக எடுத்துக் கொண்டு மலைப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

இவர் வங்கியில் பணம் எடுப்பது முதல் அவரை பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர் கவணம்பட்டி சாலையில் பால்ராஜ் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, சாலையில் 70 ரூபாய் பணம் கிடப்பதாகக் கூறி, உங்களது பணமா எடுத்து செல்லுங்கள் என மர்மநபர், பால்ராஜ் கவனத்தை திசைதிருப்பியுள்ளார். இதனை நம்பி சாலையில் கிடந்த 70 ரூபாயை எடுக்க முயன்ற போது, இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கத்தை மர்மநபர் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பால்ராஜ் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்மநபரை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வியாபாரியிடம் நூதன முறையில் 1 லட்சத்து 40 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com