‘ஜாதிய மனநிலை ஆணவக் கொலையை விட மோசமானது’ - உயர்நீதிமன்றம்

‘ஜாதிய மனநிலை ஆணவக் கொலையை விட மோசமானது’ - உயர்நீதிமன்றம்
‘ஜாதிய மனநிலை ஆணவக் கொலையை விட மோசமானது’ - உயர்நீதிமன்றம்
Published on

‘ஆணவக் கொலை’ தொடர்பான வழக்கில் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

ஒரு தம்பதியினரின் மகள் ஒரு இளைஞரை காதலித்து, அவருடன் சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த தம்பதியினர், அந்த இளைஞரின் குடும்பத்தினரிடம் சென்று தங்கள் மகளை திரும்ப ஒப்படைக்குமாறு மிரட்டியுள்ளனர். ஆனால் அவர்களின் மகள் வீடு திரும்பவே இல்லை. இதற்கிடையே உறவினர்கள், அக்கம்பக்கதினரின் பேச்சுக்களால் அந்த தம்பதினரின் மனநிலையை நிதானத்தை இழக்கும் அளவிற்கு கோபமடைந்துள்ளது. அதன் விளைவாக தங்கள் மகளை அழைத்துச்சென்ற இளைஞரின், சகோததரை அவர்கள் கொலை செய்துள்ளனர். இதுதொடர்பான வழக்கு, ‘ஆணவக் கொலை’ வழக்காக விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணைக்குப் பிறகு அந்த தம்பதியினருக்கு மரணதண்டனை வழங்கி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதனை எதிர்த்து அந்த தம்பதியினரின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள், விமலா மற்றும் கிருஷ்ணவள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர்கள், ‘இந்த வழக்கின் விசாரணைகளும், ஆதாரங்களும் இது ஒரு ஆணவக்கொலை என்பதை உறுதி செய்கிறது. இதில் ஜாதிய ரீதியான ஒரு நிலையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் குற்றம் நடைபெற்றுள்ளது. அதைத்தவிர வேறு எந்த பகையும் அந்த இரண்டு குடும்பத்திற்கும் இடையே இல்லை. சம்பவம் நடப்பதற்கு முன்னர் கொலை செய்யப்பட்டவரின் உடலில் எந்தக்காயமும் இல்லை. குற்றவாளிகள் தங்கள் மகள் வீடு திரும்ப வேண்டும் என்ற நோக்கத்தை விட, அவர்களின் சுற்றுப்புரத்தினரால் ஏற்படுத்தப்பட்ட மனநிலையின் காரணமாகவே குற்றத்தை செய்துள்ளனர். ஆகையால் இது ஆணவக்  கொலையை விட மோசமானது’ என்று கூறினர். எனவே மரண தண்டையுடன், ஆயுள் தண்டனையும் குற்றவாளிகளுக்கு வழங்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய நீதிபதிகள், ‘இந்த வழக்கின் படி பார்த்தால் இது ஒரு ஆணவக் கொலை என்பது நிரூபணம் ஆகியுள்ளது. ஆனால் இது அதைவிட மோசமானது என்பதை நீதிமன்றம் புரிந்துக்கொள்ள முடிகிறது. இதுபோன்ற குற்றவாளிகளால் இந்த சமூகத்திற்கே ஆபத்து தான். இதுபோன்ற குற்றங்கள் நாட்டின் பல பகுதிகளில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இத்தகைய ஆணவக் கொலை வழக்குகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என ஏற்கனவே உச்சநீதிமன்றம் அனைத்து நீதிமன்றங்களுக்கும் வலியுறுத்தியுள்ளது. எனவே இதுபோன்ற கடுமையான தண்டனைகள் மூலம் தான் குற்றங்களை குறைக்க முடியும்’ என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com