காணாமல் போனவரை அடை‌யாளம் காட்ட போலீசுடன் சென்றவர் பலி

காணாமல் போனவரை அடை‌யாளம் காட்ட போலீசுடன் சென்றவர் பலி
காணாமல் போனவரை அடை‌யாளம் காட்ட போலீசுடன் சென்றவர் பலி
Published on

காணாமல் போன பெண்ணை அடையாளம் காட்ட கேரள காவல்துறையினரா‌ல் அழைத்துச் செல்லப்பட்டவர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் 20 வயது பெண் ஒருவர் காணாமல் போன வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெண்ணை அடையாளம் காட்டுவதற்காக கேரள சிறப்பு புலனாய்வு பிரிவு காவல் துறையினர், பெண்ணின் உறவினர்கள் இருவரை அழைத்துக் கொண்டு நேற்றிரவு ஹைதராபாத் சென்றனர். இரவு நீண்ட நேரம் பயணம் செய்த நிலையில், வாகனம் கோவையை தாண்டி திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சென்றுகொண்டிருந்தது. 

அப்போது ஓட்டுநர் களைப்பில் கண் அசந்ததால் ஆலாம்பாளையம் பகுதியில் உள்ள மேம்பால தடுப்பு சுவரில் மோதி வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் பெண்ணின் உறவினர் ஹரி நாராயணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு உறவினர் வினு கோபால் மற்றும் காவல் துறையை சார்ந்த ராஜேஷ், விநாயகம், அருண், அனில்குமார் என 5 பேர் கோவை தனியார் மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் காவல்துறையை சார்ந்த விநாயகம் என்பவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த அவிநாசி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com