வடிவேலுவின் சினிமா கதாபாத்திரமான நேசமணி ட்ரெண்டாகியுள்ள நிலையில், அந்தக் கதாபாத்திரம் நலம்பெற வேண்டிய மதுரையில் ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் பிரார்த்தனை செய்தனர்.
தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை, விவசாயிகள் பிரச்னை, ஹைட்ரோ கார்பன் பிரச்னை, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் என எண்ணிலடங்கா பிரச்னைகள் உள்ளன. இதேபோன்று இந்தியா முழுவதும் மக்கள் பிரச்னைகள் கோடிக்கணக்கில் இருக்கின்றன.
இந்நிலையில் ‘நேசமணி’ என்ற வடிவேல் கதாபாத்திரத்தை நெட்டிசன்கள் நேற்று ட்ரெண்டாக்கியுள்ளனர். ‘ப்ரண்ட்ஸ்’ என்ற திரைப்படத்தில் வடிவேலு நடித்த அந்தக் கதாபாத்திரத்திற்காக #Pray_For_Neasamani என்பதை சென்னை, இந்தியா என ட்ரெண்டாக்கி, பின்னர் உலக ட்ரெண்ட்கிங்கில் கொண்டுவந்தனர்.
இதையொட்டி மதுரையிலுள்ள தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் கையில் மெழுகு வர்த்திகளை ஏந்தி பிரார்த்தனை செய்தனர். விரைவில் நேசமணி குணமடைய வேண்டும் என பிரார்த்திப்பது போலவும் நகைச்சுவையாக சித்தரித்தனர். தற்போதுள்ள இளைஞர் மற்றும் இணையதள சமுதாயம் இதுபோன்று பொழுதுபோக்கிற்காக கொடுக்கும் முன்னுரிமையில் 10% பொதுப்பிரச்சனைக்கு கொடுத்தால் பல தீர்வுகள் கிடைக்கும் என்பதே அனைவரது எண்ணமாக உள்ளது.