குன்னூரில் டூ மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் குட்டிகளுடன் சாலையை கடந்த செல்லும் காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை சமவெளி பகுதிகளில் இருந்து உணவு தேடி வந்த காட்டு யானைக் கூட்டம் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் காட்டு யானை கூட்டம் பகல் மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது சாலையில் உலா வந்து சாலையை கடக்க முயற்சி செய்யும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில், இரண்டு குட்டிகளுடன் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை கூட்டம் திடீரென சாலையை கடந்து செல்ல முற்பட்டது. அப்போது வாகனங்களின் சத்தம் கேட்டதாலும், அதிக மக்கள் இருந்ததாலும் யானைகள் ஓட்டம்பிடிக்கத் துவங்கின இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரு சிலர் அதிக கூச்சலிட்டு யானைகளை விரட்டி புகைப்படம் எடுத்தனர், அசம்பாவிதம் நடக்கும் முன் வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.