விழுப்புரம்: தீ மிதி விழாவில் குண்டத்தில் இடறி விழுந்த பக்தர்

விழுப்புரம்: தீ மிதி விழாவில் குண்டத்தில் இடறி விழுந்த பக்தர்
விழுப்புரம்: தீ மிதி விழாவில் குண்டத்தில் இடறி விழுந்த பக்தர்
Published on

தீ மிதி விழாவில் குண்டத்தில் இடறி விழுந்த பக்தரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆடி மாதம் பிறந்ததில் இருந்தே தமிழகம் முழுவதும் அம்மன் கோயில்களில் கூழ் வார்க்கும் திருவிழாவும் கோயிலை புதுப்பித்தலும் கோயில் கும்பாபிஷேகம் தேர்த்திருவிழா முதலிய விழாக்களும் வெகு விமர்சையாக கடைபிடிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றன.

அவ்வாறு விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் உள்ள பச்சைவாழியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தீ மிதி விழாவின்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். தொடர்ந்து நேர்த்திகடனை நிறைவேற்றும் பொருட்டு தலையில் கரகத்துடன் வந்த பக்தர் ஒருவர் தீ மூட்டியிருந்த குண்டத்தில் இடறி விழுந்ததால் காயமடைந்தார். இருப்பினும், சில நொடிகளிலேயே அவர் எழுந்து குண்டத்தை கடந்து சென்றுவிட்டார். நிகழ்வில் லேசான காயமடைந்த அந்த பக்தர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com