மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஊராண்ட உரப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த பால்பாண்டி என்பவர், வியாபாரம் செய்வதற்காக இரண்டு தனியார் வங்கிகளில் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை முறையாக செலுத்தி வந்த பால்பாண்டி, ஒரு தனியார் வங்கியில் வாங்கிய ரூ.2,40,000 பணத்தை செலுத்துவதற்கு காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் பால்பாண்டியனின் வீட்டிற்கு சென்ற வங்கி ஊழியர்கள், குறிப்பிட்ட தேதிக்குள் பணத்தை செலுத்த வேண்டும் என மிரட்டும் தொனியில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலடைந்த பால்பாண்டி அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளும், தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
இதனையறிந்த உறவினர்கள் உடனடியாக ஐவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஐவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.