சென்னை ட்ரெக்கிங் கிளப்பை தடை செய்க: போலீஸில் புகார்!

சென்னை ட்ரெக்கிங் கிளப்பை தடை செய்க: போலீஸில் புகார்!
சென்னை ட்ரெக்கிங் கிளப்பை தடை செய்க: போலீஸில் புகார்!
Published on

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் திருப்பூர் மற்றும் சென்னையைச் சேர்ந்த இரண்டு குழுவினர் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டனர். 39 பேர் கொண்ட குழுவில் 3 பேர் நீங்கலாக 36 பேர் வனப்பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் மலையேற்றம் சென்ற 30-க்கும் மேற்பட்டோர் சிக்கினர். காட்டுத் தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சென்னை ட்ரெக்கிங் கிளப் மூலம் மலையேற்றம் சென்றவர்களுக்கு, அந்த கிளப் முறையான அனுமதி பெற்றுத்தரவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அத்துடன் சென்னை ட்ரெக்கிங் கிளப் மூலம் மலையேற்றம் சென்றவர்கள் சிலர், இதற்கு முன்னதே உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சட்ட விரோதமாக செயல்படும் சென்னை ட்ரெக்கிங் கிளப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என லிங்கபெருமாள் என்பவர் நீலாங்கரை காவல்நிலையில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், “பீட்டர் வான் ஜியட் என்பவரை நிறுவனராகவும், இயக்குநராகவும் கொண்ட சென்னை ட்ரெக்கிங் கிளப் எந்த ஒரு சட்ட விதிகளையும் பின்பற்றாமல், சட்ட விரோதமாக இணையதளம் மூலம் ஏற்பாடு செய்து இருந்த காட்டுப் பயண ஏற்பட்டால், 9 பேர் உயிரிழந்துள்ளன. பத்துக்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் உள்ளனர். சிஸ்கோ என்ற வெளிநாட்டு நிறுவனத்தின் பின்னணியை கொண்ட பீட்டர் வன் ஜியட் எந்த ஒரு சட்ட நடைமுறைகளையும் பின்பற்றாமல் நடத்தியுள்ள ட்ரெக்கிங்கில் ஏற்கனவே இருவர் உயிரிழந்துள்ளனர். 2012 நவம்பர் மாதம் சென்னை ட்ரெக்கிங் கிளப் மூலம் ட்ரெக்கிங் சென்ற ஐஐடி மாணவர் ஜே.சாய்சாம் உயிரிழந்துள்ளார். 

வெளிநாட்டு நிறுவனமான சிஸ்கோ பின்னணியில் செயல்படும் பீட்டர் வான் ஜியட் பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர். சென்னை ட்ரெக்கிங் கிளப் துவக்கப்பட்டவுடன் இந்தியாவிலேயே நிரந்தரமாக தங்கிவிட்டதாக தெரிகிறது. இளம்பெண்களையும்,இளைஞர்களையும் ஈர்க்கும் வகையில் லட்சக்கணக்கில் செலவு செய்து சென்னை ட்ரெக்கிங் கிளப் இளையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகவே பீட்டர் வான் ஜியட் குறித்தும், அவரது பின்னணி குறித்தும் சென்னை ட்ரெக்கிங் கிளப் செயல்படுவதற்கு வெளிநாட்டில் இருந்து சட்ட விரோத பணபரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் விசாரித்து, சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, பீட்டர் வான் ஜியட்டை கைது செய்ய வேண்டுகிறேன். அதோடு சட்ட விரோதமாக ட்ரெக்கிங் நடத்தும் சென்னை ட்ரெக்கிங் கிளப்பிற்கு தடை விதிக்க வேண்டுகிறேன்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

(தகவல்கள்: சாந்தகுமார், புதிய தலைமுறை செய்தியாளர், தாம்பரம்)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com