‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு தடை கேட்டு மனு - மீண்டும் வில்லங்கம்

‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு தடை கேட்டு மனு - மீண்டும் வில்லங்கம்
‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு தடை கேட்டு மனு  - மீண்டும் வில்லங்கம்
Published on

‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு தடை விதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமிட் சாய்மீரா நிறுவனம் சார்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. அதில், கடந்த 2008ஆம் ஆண்டு ‘மர்மயோகி’ என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கும் இடையே ஒப்பப்தம் மேற்கொள்ளப்பட்டது. ரூ.100 கோடி செலவில் தயாரிக்க திட்டமிடப்பட்ட அந்தப் படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக ரூ.6.90 கோடி வழங்கப்பட்டது. அத்துடன் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு ரூ.4 கோடி கொடுக்கப்பட்டது. 

அந்தப்பணம் ‘மர்மயோகி’ படம் தயாரிக்க பயன்படுத்தப்படாமல், “உன்னைபோல் ஒருவன்” படத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த ரூ.6.90 கோடி கேட்டு சாய்மீரா நிறுவனத்தால் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ‘விஸ்வரூபம் 2’ படத்தை ஆகஸ்ட் 10அம் தேதி வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘விஸ்வரூபம் 2’படத்தை தயாரிக்க பலரிடம் கடன் வாங்கியுள்ள நிலையில், ‘மர்மயோகி’ படத்திற்கு கொடுத்த சம்பளம் ரூ.4 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ‘விஸ்வரூபம் 2’ படத்தை வெளியிடத்தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com