நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தொரப்பள்ளி பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் தங்குவதற்காக கர்நாடகாவில் இருந்து தம்பதிகள் காரில் வந்துள்ளனர். இதையடுத்து தொரப்பள்ளி வன சோதனை சாவடிக்கு சற்று முன்புள்ள வனப்பகுதி மண் சாலையில் கார் சென்றுள்ளது. காரில் வந்தவர்கள் அத்துமீறி வனப் பகுதிக்குள் நுழைவதாக எண்ணிய வனத்துறை பணியாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர்.
அப்போது காரில் இருந்த தம்பதியர். சுற்றுலா வந்த இடத்தில் தங்கும் விடுதிக்கு வந்ததாகவும், Google map பார்த்து பயணித்த போது வழி தவறி வனப்பகுதி சாலைக்குள் சென்றதாகவும் கூறியுள்ளனர். இதனை அடுத்து தம்பதிகள் செல்ல வேண்டிய பகுதிக்கு வழிகாட்டிய வனத் துறையினர் அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.