வடலூர்: 16 கிலோ அரிசி வாங்கியவருக்கு கிடைத்த 15 லட்சம்.. கடை உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

வடலூர் அருகே அரிசி மூட்டை வாங்கியவருக்கு மூட்டைக்குள் 15 லட்சம் கிடைத்த நிலையில், கடை உரிமையாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே மோதல் முட்டியுள்ளது.
அரிசி கடை
அரிசி கடைweb
Published on

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே அரிசி கடை வியாபாரி பாதுகாப்பு காரணத்திற்காக அரிசி மூட்டையில் ரூ.15 லட்சத்தை மறைத்து வைத்திருந்துள்ளார். அது தெரியாமல் அரிசி மூட்டையை கடை உரிமையாளரின் மைத்துனர் விற்பனை செய்துள்ளார். ஆனால் அரிசிமூட்டையில் வெறும் 10 லட்சம் மட்டும்தான் இருந்ததாக வாங்கிசென்றவர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரிசி கடை
கன்னியாகுமரி வரதட்சணை கொடுமை: மருமகள் இறந்த நிலையில், கைதுக்கு பயந்து மாமியார் விபரீத முயற்சி!

16 கிலோ அரிசி மூட்டையில் 15 லட்சம் ரூபாய்..

கடலூர் மாவட்டம் வடலூர் ராகவேந்திரா சிட்டியில் வசிப்பவர் சண்முகம் (40). இவர் நெய்வேலி மெயின் ரோட்டில் அரிசி கடை வைத்து மொத்தமாகவும் சில்லறையாகவும் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மைத்துனர் சீனிவாசன், விற்பனை செய்தபோது அரிசி கடையில் இருந்துள்ளார். அப்போது மந்தாரக்குப்பம் அருகே உள்ள குறவன் குப்பம்-மேல்பாதி கிராமத்தை சேர்ந்த நீண்ட கல வாடிக்கையாளர் பூபாலன் (62) என்பவர் அரிசி வாங்க வந்துள்ளார். அவர் கேட்டதன் பேரில் 16 கிலோ அரிசி மூட்டையை சீனிவாசன் விற்பனை செய்தார்.

இதற்கிடையில் சில மணி நேரத்திற்கு பிறகு கடை உரிமையாளர் சண்முகம் கடைக்கு வந்துள்ளார். அங்கு பணத்துடன் இருந்த குறிப்பிட்ட அரிசி மூட்டை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அந்த அரிசி மூட்டை எங்கே? என்று சீனிவாசனிடம் கேட்க, அதற்கு அவர், வழக்கமாக நமது கடையில் அரிசி வாங்கும் பூபாலனிடம் மூட்டையை விற்பனை செய்தேன் என்று கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த சண்முகம் தலையில் அடித்துக்கொண்டு, அந்த அரிசி மூட்டையில் பல நாள் வியாபாரம் செய்து வைத்திருந்த பணம் ரூ.15 லட்சத்தை மறைத்து வைந்திருந்ததாக தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட சீனிவாசன் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து 2 பேரும் பூபாலன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அரிசிமூட்டை பிரிக்கப்பட்டு இருந்தது. வீட்டில் இருந்த பூபாலனின் மகளிடம், இந்த மூட்டையில் ரூ.15 லட்சம் வைத்திருந்ததாகவும், அதை கொடுக்குமாறும் சண்முகம் கேட்டுள்ளார். அதற்கு அரிசி மூட்டையில் வெறும் ரூ.10 லட்சம் மட்டும்தான் இருந்ததாக கூறி அந்த பணத்தை அவர் கொடுத்துள்ளார்.

வடலூர் காவல் நிலையம்
வடலூர் காவல் நிலையம்

அந்த பணத்தை பெற்றுக் கொண்ட சண்முகம், மீதமுள்ள ரூ.5 லட்சத்தை எங்கே என்று கேட்டு பூபாலனின் மகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பதிலுக்கு அவரும் வாக்குவாதம் செய்த நிலையில், இதுகுறித்து வடலூர் போலீஸ் நிலையத்தில் சண்முகம் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரிசி கடை
சமூக அக்கறையால் பறிபோன உயிர்.. மதுரையில் சோகம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com