செங்கல்பட்டு: ராணுவ பயிற்சி மையத்திலிருந்து தவறி கிராமத்தில் விழுந்த துப்பாக்கி தோட்டா

செங்கல்பட்டு அருகே ராணுவ பயிற்சி மையத்திலிருந்து தவறி கிராமத்திற்குள் சென்று விழுந்துள்ளது ஒரு துப்பாக்கி தோட்டா. நல்வாய்ப்பாக அங்கிருந்த பெண் உயிர் தப்பினார்.
House
Housept desk
Published on

செய்தியாளர் - உதயகுமார்

---------- 

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவிலை அடுத்த அனுமந்தபுரம் வனப்பகுதியில் ராணுவ வீரர்கள் பயிற்சி முகாம் உள்ளது. இங்கு ராணுவ வீரர்களுக்கு, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தி பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி மையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சென்னேரி கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரின் மனைவி ஜெயலட்சுமி.

நேற்று காலை ஜெயலட்சுமி தனது வீட்டின் வரவேற்பு அறையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரிம் உடலின் மீது துப்பாக்கி தோட்டாபட்டுள்ளது. நல்வாய்ப்பாக அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

Bullet
Bulletpt desk

இது குறித்து, கிராம மக்கள் செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து செங்கல்பட்டு தாசில்தார், வருவாய்த் துறை அதிகாரிகள், போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சென்னேரி கிராமத்தை ஆய்வு செய்து கிராம மக்களிடம் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அடிக்கடி இதுபோன்ற துப்பாக்கி தோட்டாக்கள் கிராமத்தில் வந்து விழுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

House
துப்பாக்கியை சுத்தம் செய்தபோது தவறுதலாக வெளியேறிய தோட்டா; பறிபோன மனைவி உயிர்-கணவரும் விபரீத முடிவு!

ராணுவ பயிற்சி மையம் உள்ள பகுதி மறைமலைநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால் அங்கு மறைமலைநகர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் முத்து சுப்ரமணியம் மற்றும் அனுமந்தபுரம் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோரும் விசாரணை நடத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com