பழனி முருகன் கோயில் மலையடிவாரத்தில் 15 நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
பழனி முருகன் கோயில் மலையடிவாரத்தில் பக்தர்கள் வசதிக்காக ரோப்கார் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ரோப்கார் நிலையத்தின் அருகே அடர்ந்த மரங்கள் உள்ள நிலையில் அங்கு மலைப்பாம்பு, மயில், குரங்குகள் உள்ளிட்ட பல உயிரினங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், ரோப்கார் நிலையம் அருகில் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று நாயை விழுங்க முடியாமல் சுருண்டு கிடந்தது.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ரோப்கார் நிலைய ஊழியர்கள், வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் மலைப்பாம்பை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.