ஆற்றில் தத்தளித்த பெண்ணை காப்பாற்றிய 12 ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஆற்றில் தத்தளித்த பெண்ணை காப்பாற்றிய 12 ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
ஆற்றில் தத்தளித்த பெண்ணை காப்பாற்றிய 12 ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
Published on

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 12ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவன் அமராவதி ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சீதாநகர் பகுதியில் வசித்து வரும் முகமது ரஃபி என்பவரது மகன் நிஷாரஹீப் (17). இவர், அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நிஷாரஹீப் இன்று நண்பர்களுடன் அலங்கியம் சீத்தகாடு பகுதியில் உள்ள அமராவதி தடுப்பணையில் குளிப்பதற்காக சென்றார்.

அப்போது ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது இவரின் அருகே குளித்துக் கொண்டிருந்த பெண், எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தார் அதைக் கண்ட நிஷாரஹீப், நீரில் மூழ்கி அந்தப் பெண்ணை மேலே தூக்கி விட்டு அவரின் உயிரை காப்பாற்றினார். அதே சமயத்தில் அவருடைய கால்கள் சேற்றுப் பகுதியில் மாட்டிக்கொண்ட கால்களை எடுக்க முயற்சித்தபோது நீரில் மூழ்கி மாயமானார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேர தேடலுக்குப் பின் மாணவர் நிஷாரஹீப் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனை அடுத்து அலங்கியம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தந்தை முகமது ரஃபி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com